Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

விருதைத் தாய்க்குச் சமர்ப்பித்து அழகு பார்த்த மொரோக்கோ நட்சத்திரம் அச்ராஃப் ஹக்கிமி

வாசிப்புநேரம் -
மொரோக்கோ அணியின் அச்ராஃப் ஹக்கிமிக்கு (Achraf Hakimi) சவுதி அரேபியாவின் சிறந்த விளையாட்டாளருக்கான விருது நேற்று முன்தினம் (ஜனவரி 21) வழங்கப்பட்டது.

விருதைப் பெற தமது தாயாருடன் மேடை ஏறினார் ஹக்கிமி.

விருதை அவரது அன்னைக்குச் சமர்ப்பித்து அழகு பார்த்தார் ஹக்கிமி.

தாயின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்ததோடு, அவர் விளையாடும் PSG குழுவிற்கும் தமது தாய்நாடான மொரோக்கோவிற்கும் நன்றி கூறினார் அவர்.

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் போது, ஸ்பெயினுக்கு எதிராகப் பெனால்ட்டி கோலை அடித்து மொரோக்கோ வெற்றி பெற்றது. அப்போது ஹக்கிமி, அவரது தாயாரின் கன்னங்களில் முத்த மழை பொழிந்த காட்சிகள் சமூக ஊடகத் தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டன.
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்