Skip to main content
உலகத் தலைவர்கள் டிரம்ப்புக்குப் பாராட்டு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

உலகத் தலைவர்கள் டிரம்ப்புக்குப் பாராட்டு

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அமெரிக்க அதிபர் தேர்தலில் தாம் வெற்றி பெற்றுவிட்டதாகக் குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

உலகத் தலைவர்கள் பலர் அவருக்கு வாழ்த்துத்தெரிவித்து வருகின்றனர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

திரு மோடி "வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்குத்" திரு டிரம்ப்பிற்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

அவருடன் மீண்டும் ஒத்துழைக்க ஆர்வமாய் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு

திரு டிரம்ப்பின் வெற்றி அமெரிக்க-இஸ்ரேலிய உறவின் புதிய தொடக்கமாக அமையும் என்றார் திரு நெட்டன்யாஹு.

இது மாபெரும் வெற்றி என்றும் அவர் புகழ்ந்தார்.

பிரெஞ்சு அதிபர் இமானுவல் மக்ரோன்

திரு மக்ரோன் "அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கு" வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

ஏற்கனவே நான்கு ஆண்டுகள் சேர்ந்து ஒத்துழைத்ததைப் போல் மீண்டும் செயல்படத் தயாராக இருப்பதாய் திரு மக்ரோன் குறிப்பிட்டார்.

உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி

அதிபராகத் திரு டிரம்ப் உக்ரேனில் அமைதியைக் கொண்டுவர முயல்வார் என நம்புவதாகத் திரு ஸெலென்ஸ்கி கூறினார்.

திரு டிரம்ப்பின் வெற்றி மகத்தானது என்றும் அவர் சொன்னார்.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்