Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

துருக்கியே அதிபருக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து

வாசிப்புநேரம் -
துருக்கியே அதிபருக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து

(படம்: REUTERS/Umit Bektas)

துருக்கியே அதிபராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள திரு. எர்துவானுக்கு வட்டார, உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துக் கூறியுள்ளனர். 

ஈரான், அல்ஜீரியா, கத்தார் ஆகிய நாடுகளின் தலைவர்கள் அவர்களில் அடங்குவர். 

நேட்டோக் கூட்டணியில் துருக்கியே அதிபருடன் தொடர்ந்து இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் Twitterஇல் குறிப்பிட்டுள்ளார். 

ரஷ்யா - துருக்கியே நட்றவுக்குத் திரு. எர்துவான் ஆற்றிய பங்களிப்பைப் பெரிதும் மதிப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் பாராட்டியுள்ளார். 

திரு. எர்துவான் மீண்டும் அதிபராகத் தெரிவு செய்யப்பட்டிருப்பதை உக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) வரவேற்றுள்ளார்.

மாஸ்கோவுடன் நெருங்கிய உறவு இருந்தாலும், தொடரும் உக்ரேனியப் போரில் திரு. எர்துவான் சமரச முயற்சிகளில் ஈடுபடுவதை அவர் சுட்டினார்.

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்