உலகின் ஓர் அரிய வகை ரத்தம் இருக்கும் பெண் இந்தியாவின் பெங்களூருவில்
வாசிப்புநேரம் -
படம்: Envato Elements
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
இந்தியாவின் பெங்களூருவுக்கு அருகில் வசிக்கும் 38 வயதுப் பெண்ணுக்கு CRIB எனும் அரிய வகை ரத்தம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
அவருக்கு முன் உலகில் வேறொருவருக்கு மட்டும் இந்த வகை ரத்தம் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
CRIB என்பது கிரோமர் (Cromer) ரத்த வகையைக் குறிக்கிறது. இந்த ரத்த வகையில் அரிய ஏன்டிஜன் (antigen) இருப்பதால் ரத்த தானம் பெறும்போது அந்நிய ரத்தத்தை உடல் எதிர்க்கும். இதனால் ரத்த தானம் பெற வேண்டுமென்றால் பொறுத்தமான நபரைத் தேர்ந்தெடுப்பது மிகவும் கடினம்.
பெண்ணுக்கு ரத்தம் செலுத்த முயன்று முடியாமல்போன போது மருத்துவர்கள் அவருக்கு இருப்பது அரிய வகை ரத்தம் என்பதைக் கண்டறிந்தனர்.
இந்தக் கண்டுபிடிப்பால் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் அவசரகாலச் சிகிச்சையை மேம்படுத்த முடியும். கர்ப்பிணிகள், கைக்குழந்தைகளின் சுகாதாரத்தை மேம்படுத்தவும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்று இந்தியாவின் The Economic Times கூறுகிறது.

ஆதாரம் : Others