Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சுற்றுலாக்கள் மீண்டும் தொடங்கிவிட்டன - வலியுறுத்தியது இந்த ஆண்டின் 'உலகச் சுற்றுலா தினம்'

வாசிப்புநேரம் -

உலகில் பத்தில் ஒருவர் சுற்றுலாத்துறையில் பணிபுரிகின்றனர் என்பது உங்களுக்குத் தெரியுமா? 

கடந்த ஈராண்டாகக் கிருமிப்பரவல் சூழலில் உலகெங்கும் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் அனைத்துலகப் பயணத்துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

தற்போது வழக்கநிலை திரும்பியுள்ள நிலையில் அனைத்துலகப் பயணத்துறை இவ்வாண்டின் முதல் 5 மாதங்களில் அதிக முன்னேற்றம் கண்டுள்ளது.

அது குறித்து ஐக்கிய நாட்டு நிறுவனத்துடைய இனணயத்தளத்தில் தகவல்கள் வெளியிடப்பட்டன.

இன்று (27 செப்டம்பர்) உலகச் சுற்றுலா தினம்.
உலகச் சுற்றுலா தினக் கொண்டாட்டம் 1980 ஆம் ஆண்டு தொடங்கியது. இவ்வாண்டின் கருப்பொருள் 'Rethinking Tourism'. 

இந்த நாள் பயணத்துறை ஒரு சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் மீட்சிக்கும் பெரும் அளவில் பங்களிக்கும் வகையில் உள்ளது என்பதனை வலியுறுத்துகிறது. 

மக்களிடையே சுற்றுலாவின் முக்கியத்துவத்தையும் அதன் தாக்கத்தையும் உணர்த்துவதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. 

இந்த நிகழ்வை உலகப் பயணத்துறை அமைப்பு பாலியில் (Bali) இன்று நடத்துகி்றது. 

பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது துறையின் மீட்சிக்கு முக்கியப் பங்காற்றும் என்று உலகச் சுற்றுலா அமைப்பு கூறியது.

பயணத்துறையின் மீள்திறனை வலிமையாக்குவதற்கு அரசாங்கம், சமூகம் தொழில் துறைகள் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுவது முக்கியம் என்றும் அமைப்பு வலியுறுத்தியது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்