Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உக்ரேனியப் போரின் ஓராண்டு நிறைவை அனுசரிக்கும் நகரங்கள் (படங்கள்)

வாசிப்புநேரம் -

ரஷ்ய-உக்ரேன் போரின் ஓராண்டு நிறைவு இன்று (24 பிப்ரவரி) அனுசரிக்கப்படுகிறது.

உலகின் பல்வேறு நகரங்கள் பல விதங்களில் அதை அனுசரிக்கின்றன.

சில படங்கள் இதோ...

பாரிஸ், பிரான்ஸ்

ஐஃபல் (Eiffel) கோபுரம் உக்ரேனியக் கொடியின் வண்ணங்களில் ஒளியூட்டப்பட்டது. அது நீல, மஞ்சள் நிறங்களில் காட்சியளித்தது.

AFP
AFP

பிரசல்ஸ் (Brussels), பெல்ஜியம் (Belgium)

ஐரோப்பிய நாடாளுமன்றம், ஐரோப்பிய ஆணையம் உள்பட ஐரோப்பிய ஒன்றியக் கட்டடங்கள் உக்ரேனியக் கொடியின் வண்ணங்களில் ஒளியூட்டப்பட்டன.

அரசாங்கச் சார்பற்ற அமைப்பு ஒன்றும் அகதிகளும் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில், போரில் கடத்தப்பட்ட பிள்ளைகளை நினைவுகூரும் வகையில் பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தன. 

விளையாட்டுப் பொருள்களும் அங்கே வைக்கப்பட்டிருந்தன.

AFP
AFP

லண்டன்

உக்ரேனியக் கொடிகளைப் போர்த்தியவாறு பலர் டிரஃபால்கர் சதுக்கத்தில் (Trafalgar Square) பிரார்த்தனை நடத்தினர்.

AFP
AFP

ரஷ்யத் தூதரகத்துக்கு வெளியே உக்ரேனிய ஆர்வலர்கள் சிலர், 300 லிட்டர் அளவுள்ள மஞ்சள், நீல நிறச் சாயத்தைத் கொட்டி உக்ரேனியக் கொடியை வரைந்தனர்.

அந்தக் கொடியின் பரப்பளவு 500 சதுர மீட்டர். 

Facebook/Led By Donkeys
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்