Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகம் சுற்றும் உல்லாசக் கப்பல் - 3.5 ஆண்டுகளுக்குச் சுகமான கப்பல் பயணம் ஆரம்பம்

வாசிப்புநேரம் -
மூன்றரை ஆண்டுகளுக்கு உலகைச் சுற்றவிருக்கும் முதல் உல்லாசக் கப்பலான Odyssey அயர்லந்தின் பெல்ஃபஸ்ட் (Belfast) நகரிலிருந்து புறப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் அந்நகரிலிருந்து புறப்படவிருந்த அந்தக் கப்பல் திடீரெனப் பழுதடைந்தது.

தற்போது அவை சரிசெய்யப்பட்டுவிட்டன.

கப்பலை இயக்க அனுமதி கிடைத்துள்ளதாக Villa Vie Residences நிறுவனம் Facebookஇல் தெரிவித்தது.

இதையடுத்து 650 பயணிகளை ஏற்றக்கூடிய Odyssey சொகுசுக் கப்பலின் பயணம் தொடங்கியுள்ளது.

7 கண்டங்களையும் 425 துறைமுகங்களையும் கடந்து உலகம் முழுதும் சுற்றிவர அதற்கு 1,301 நாள்களாகும்.

கப்பல் சிங்கப்பூர் வரை பயணம் செய்யும்.

பயணிகளில் சிலர் கப்பலைத் தங்களது நிரந்தர இல்லமாக மாற்றிக்கொள்ள விரும்புவதாக Reuters செய்தி நிறுவனம் தெரிவித்தது.

பயணம் 4 மாதங்களுக்குத் தாமதமடைந்தாலும் அடுத்த மூன்றரை ஆண்டுகளுக்கு உல்லாசமாக உலகைச் சுற்றி வரப்போவதை எண்ணி மகிழ்ச்சியடைவதாக ஒரு தம்பதி கூறினர்.

அவர்கள் 50ஆவது திருமண ஆண்டுநிறைவைக் கப்பலில் கொண்டாடுகின்றனர்.







 
ஆதாரம் : Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்