Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

40 ஆண்டுகளில் முதல்முறையாக உலகின் ஆகப்பெரிய எரிமலை வெடிப்பு (படங்கள்)

வாசிப்புநேரம் -
உலகில் வெடிக்கக்கூடிய நிலையில் இருக்கும் ஆகப்பெரிய எரிமலை 40 ஆண்டுகளில் முதல்முறையாகக் குமுறியுள்ளது.

ஹவாயியின் (Hawaii) மாவ்னா லோவா (Mauna Loa) எரிமலையில் பல ஆண்டுகளாகவே அழுத்தம் அதிகரித்து வந்ததாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்தது.
 
AFP PHOTO / US Geological Survey
நேற்று முன்தினம் (27 நவம்பர்) நள்ளிரவுக்கு முன்பு எரிமலை வெடிக்கத் தொடங்கியது.

வெடிப்புப் பகுதிக்குக் கீழ் வசிக்கும் மக்களுக்குத் தற்போது ஆபத்து ஏதும் இல்லை என்று அமைப்பு சொன்னது.
 
AFP PHOTO / US Geological Survey
ஆனால் எரிமலை வெடிப்பு மோசமாகலாம் என்று அது எச்சரித்தது.

தற்போது மக்களை வெளியேற்றும் உத்தரவுகள் ஏதும் விடுக்கப்படவில்லை.

அந்த எரிமலை 1984ஆம் ஆண்டுக்குப் பின்னர் வெடித்ததில்லை.
AFP PHOTO / US Geological Survey
மாவ்னா லோவா என்றால் நீளமான மலை என்று அர்த்தம்.

ஹவாயியில் உள்ள மற்ற தீவுகளைச் சேர்த்தாலும் அதை விட மாவ்னா லோவா பெரியது.

அது 1843ஆம் ஆண்டு முதல் 33 முறை வெடித்திருக்கிறது.
ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்