Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகிலேயே ஆக நீண்ட காலமாக அதிபர் பொறுப்பில் இருப்பவர் யார்?

வாசிப்புநேரம் -
தியொடொரொ ஒபியாங் நகுவமா மபாசொகொ (Teodoro Obiang Nguema Mbasogo).

80 வயதான அவர் மத்திய ஆப்பிரிக்க நாடான ஈக்குவடோரியல் கினியைச் (Equatorial Guinea) சேர்ந்தவர்.

அவர் அதிபர் தேர்தலில் கிட்டத்தட்ட 95 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக BBC செய்தி நிறுவனம் சொன்னது.

அவர் 1979-இலிருந்து 43 ஆண்டுகளாக அதிபராகச் செயல்பட்டுவருகிறார்.

உலகிலேயே ஆக நீண்ட காலமாக அதிபர் பொறுப்பில் இருக்கும் பெருமை அவரைச் சேரும்.

ஈக்குவடோரியல் கினியில் அவரது செல்வாக்கு அதிகமாக உள்ளது.

அவரது குடும்பத்தினரும் அரசாங்கத்தில் பல முக்கியப் பொறுப்புகளில் உள்ளனர்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் தேர்தலில் முறைகேடாக நடந்துகொண்டதன் தொடர்பிலும் ஒபியாங் மீது முன்பு குற்றஞ்சாட்டப்பட்டது.

அவர் குற்றச்சாட்டுகளை நீக்கத் திட்டமிடுவதாக BBC சொன்னது.

செப்டம்பர் மாதத்தில், அவரது நிர்வாகத்தின் கீழ் செயல்பட்ட அரசாங்கம் மரணதண்டனையை நீக்கியது.

ஐக்கிய நாட்டு நிறுவனம் அதனைப் பெரிதும் பாராட்டியது.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்