Skip to main content
உலகின் ஆகச் சுறுசுறுப்பான விமான நிலையம் எது?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகின் ஆகச் சுறுசுறுப்பான விமான நிலையம் எது?

வாசிப்புநேரம் -

உலகின் ஆகச் சுறுசுறுப்பான விமான நிலையத்துக்குக் கடந்த ஆண்டு 108.1 மில்லியன் பயணிகள் சென்றிருந்தனர்.

எந்த விமான நிலையம் என்று தெரியுமா?

அமெரிக்காவின் ஜார்ஜியா (Georgia) மாநிலத்தில் உள்ள Hartsfield-Jackson Atlanta அனைத்துலக விமான நிலையம்.

அனைத்துலக விமான நிலைய மன்றம் வெளியிட்ட பட்டியலில் Hartsfield-Jackson Atlanta விமான நிலையம் 26ஆவது முறையாக முதலிடத்தில் வந்தது.

தரவரிசையை நிர்ணயிக்க உள்நாட்டுச் சேவைகள், வெளிநாட்டுச் சேவைகள் ஆகியவற்றைப் பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை கருத்தில் கொள்ளப்பட்டது.

2024இல் ஆகச் சுறுசுறுப்பான விமான நிலையங்கள்

1. Hartsfield-Jackson Atlanta, அமெரிக்கா
பயணிகள்: 108.1 மில்லியன்

2. Dubai, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள்
பயணிகள்: 92.3 பில்லியன்

3. Dallas Fort Worth, அமெரிக்கா
பயணிகள்: 87.8 மில்லியன்

4.  Haneda விமான நிலையம், ஜப்பான்
பயணிகள்: 85.9 மில்லியன்

5. Heathrow விமான நிலையம், பிரிட்டன்
பயணிகள்: 83.9 மில்லியன்

வெளிநாட்டு விமானச் சேவைகளைப் பொறுத்தவரை, துபாய் விமான நிலையம் ஆகச் சுறுசுறுப்பாக இருந்தது.

இந்நிலையில் பயணத்துறை  கிருமிப்பரவலுக்கு முந்தைய காலத்தை விடச் சிறப்பான நிலையில் இருப்பதாக அனைத்துலக விமான நிலைய மன்றம் கூறியுள்ளது.

கடந்த ஆண்டு பயணிகளின் மொத்த எண்ணிக்கை 9.5 பில்லியன் என்று அது சொன்னது.

2019இல் பதிவான எண்ணிக்கையை விட அது 3.8 விழுக்காடு அதிகம்.

ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்