Skip to main content
6 மாதக் குட்டி நீர்யானைக்கு அடையாள அட்டை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

6 மாதக் குட்டி நீர்யானைக்கு அடையாள அட்டை

வாசிப்புநேரம் -
6 மாதக் குட்டி நீர்யானைக்கு அடையாள அட்டை

(படம்: ขาหมู แอนด์เดอะแก๊ง/ Facebook)

உலகளவில் பிரபலமான மூ டெங் (Moo Deng) என்ற நீர்யானை பிறந்து 6 மாதமாகிறது.

அதைக் கொண்டாடும் விதமாக அதற்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

அது பற்றி 8 Days விவரம் தந்தது.

அடையாள அட்டையில் அதன் புகைப்படம், பெயர், பிறந்த தேதி, முகவரி, அடையாள அட்டை எண் ஆகிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

மூ டெங் வசிக்கும் கூண்டின் வாசலில்
அடையாள அட்டை உள்ளது. அதன் புகைப்படம்
Facebook தளத்தில் பகிரப்பட்டுள்ளது.

அது இணையவாசிகள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதிர்ஷ்டக் குலுக்குச் சீட்டு வாங்க அதன் அடையாள அட்டை எண் உகந்ததாகயிருக்கும் என்றும் சிலர் கருதுகின்றனர்.

தாய்லாந்தின் கௌ கியௌ (Khao Kheow) விலங்கியல் தோட்டத்தில் உள்ள மூ டெங் பிறந்து இரண்டு மாதங்களிலேயே அதன் கொழு கொழு தோற்றம் காரணமாக இணையத்தில் பிரபலமானது.

மூ டெங் பிறந்து மூன்று மாதமானபோது எடுக்கப்பட்ட பாதச் சுவடுகளை விலங்கியல் தோட்டம் ஏலத்தில் விட உள்ளது. அதிலிருந்து பெறும் தொகையை அது வனவிலங்கு ஆதரவுத் திட்டத்திற்குப் பயன்படுத்த உள்ளதாக 8 Days குறிப்பிட்டது.
 
ஆதாரம் : 8 Days

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்