உலகம் trending
வதந்திகளை நம்பாதீர்! உலகின் ஆக வயதான ஆமை உயிருடன் இருக்கிறது
படம்: AP
This audio is generated by an AI tool.
உலகின் ஆக வயதான ஆமை இறந்துவிட்டதாக வதந்திகள் பரவுகின்றன.
ஏப்ரல் முதல் தேதி193 வயது ஆமை ஜோனத்தன் (Jonathan) மாண்டதாக வதந்திகள் பரவத் தொடங்கின.
அது தற்போது செயிண்ட் ஹெலெனா (St. Helena) தீவில் உயிருடன் இருப்பதாகத் தீவின் பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.
ஏப்ரல் முதல் தேதி ஏப்ரல் ஃபூல்ஸ் (April Fools) தினம் கொண்டாடப்படுகிறது. அன்று பலர் ஒருவரையொருவர் வேடிக்கையாக ஏமாற்றுவர்.
அந்த விதத்தில் ஜோனத்தன் இறந்துவிட்டதாக X தளத்தில் தகவல் வெளியானது.
விலங்கு மருத்துவர் ஜோ ஹோல்லின்ஸ்ஸாக (Joe Hollins) வேடமிட்டு ஒருவர் X தளத்தில் அவ்வாறு பதிவிட்டார்.
அந்தப் பதிவு கிட்டத்தட்ட 2 மில்லியன் முறை பார்க்கப்பட்டது.
ஆனால் தமக்கு X பக்கம் கிடையாது என்று திரு ஹோல்லின்ஸ் Facebook தளத்தில் பதிவிட்டார். அந்த வதந்தியை நம்பவேண்டாம் என்று அவர் வலியுறுத்தினார்.
அந்த வதந்தியைப் பரப்பியவர் மின்னிலக்க நாணய மோசடியில் ஈடுபடுகிறார் என்பதையும் திரு ஹோல்லின்ஸ் சுட்டினார்.