Skip to main content
"பல்லாண்டு காணாத மோசமான மோதல்"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

"பல்லாண்டு காணாத மோசமான மோதல்" - கவலையில் பாகிஸ்தானிய மக்கள்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் வலுத்துவருகிறது. அது பல்லாண்டு காணாத மோசமான மோதல் என்று பாகிஸ்தானிய மக்கள் BBC செய்தியிடம் கூறியுள்ளனர்.

தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள ஒரு சந்தைக்கு வெளியே மக்களைச் சந்தித்துப் பேசியது BBC.

"இந்தியாவின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுப்பதைத் தவிரப் பாகிஸ்தானுக்கு வேறு வழியில்லை" என்று கடைக்காரர்களில் ஒருவர் BBC செய்தியிடம் கூறினார்.

தமது பாதுகாப்பைப் பற்றி கவலையில்லை என்று கூறிய அவர் இந்த மோதல் எப்போது முடியும் என்று யோசிப்பதாகச் சொன்னார்.

"எந்தச் சமயத்தினராக இருந்தாலும் இரு நாட்டு மக்களுக்கும் போர் நல்லதல்ல" என்றார் அவர்.

இந்தியா - பாகிஸ்தான் மோதலால் வான்வெளிகள் மூடப்பட்டுள்ளன. விமானப் போக்குவரத்து சீராகும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகச் சொல்கிறார் பிரிட்டனுக்குத் திரும்பவேண்டிய ஒருவர்.

ஏதோ ஒரு கட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதலை நிறுத்தி அமைதி காணும் என்று தாம் நம்புவதாக அவர் சொன்னார்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்