சீன அதிபர் நாளை ரஷ்யாவுக்குப் பயணம்

(கோப்புப் படம்: Pang Xinglei/Xinhua via AP)
சீன அதிபர் சி சின்பிங் (Xi Jinping) நாளை (20 மார்ச்) ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார். உக்ரேனியப் போரை நிறுத்தும் முயற்சியில் அவர் ஈடுபடுவார் என்று பரவலாகப் பேசப்படுகிறது.
3 நாள் பயணத்தின்போது போரை நிறுத்துமாறு திரு. புட்டினை அவர் கேட்டுக்கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சீனா அமைதிகாக்க விரும்பும் நாடாக தன்னை நிலைப்படுத்திக்கொள்ள எண்ணம் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
மூன்றாம் தவணைக் காலத்திற்கு அதிபராய்ப் பொறுப்பேற்றுள்ள அதிபர் சி, உலக அரங்கில் பெரும் பங்காற்ற விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
மத்தியக் கிழக்கு நாடுகளான ஈரானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையில் உறவைச் சீர்படுத்த அதிபர் சி முயற்சி மேற்கொண்டார்.
மேலும் விரைவில் அதிபர் சி, உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியைச் (Volodymyr Zelenskyy) சந்திக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.