Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஆயுட்காலம் நீட்டிப்பதைப் பற்றி பேசிய ரஷ்ய அதிபர் புட்டின், சீன அதிபர் சி

வாசிப்புநேரம் -
ஆயுட்காலம் நீட்டிப்பதைப் பற்றி பேசிய ரஷ்ய அதிபர் புட்டின், சீன அதிபர் சி

(படம்: Alexander KAZAKOV / POOL / AFP)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சீன அதிபர் சி சின்பிங்கும் (Xi Jinping) ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் (Vladimir Putin) தனிப்பட்ட முறையில் பேசிக்கொண்ட உரையாடல் அரசாங்க ஊடக ஒலிவாங்கியில் பதிவாகியுள்ளது.

நேற்று (3 செப்டம்பர்) சீனாவின் தியனான்மென் சதுக்கத்தில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் திரு புட்டினும் வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் கலந்துகொண்டனர்.

இருவரும் திரு சியுடன் சிவப்பு கம்பளத்தில் நடந்து சென்றபோது உரையாடியது சீனாவின் CCTV ஊடகத்தில் பதிவானது.

"இந்தக் காலத்தில்... 70 வயது" என்று திரு சி சீன மொழியில் கூறினார்.

"அந்தக் காலத்தில் 70 வயதைக் கடப்பது மிகவும் அரிதாக இருந்தது... இப்போது 70 வயதில் ஒருவர் இன்னும் சிறு பிள்ளை தான்"

என்று திரு புட்டின் பதிலளித்தார்.

உயிரித் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் மனித உறுப்புகள் தொடர்ந்து மாற்றப்படலாம்... வயதாக ஆக இன்னும் இளமையாகலாம்... சாகா வரம் பெறலாம் என்று திரு புட்டின் சொன்னதாக மொழிபெயர்ப்பாளர் திரு சியிடம் குறிப்பிட்டார்.

அதற்கு பதிலளித்த திரு சி, இந்த நூற்றாண்டில் 150 வயது வரை வாழ்வது சாத்தியம் என்று கூறினார்.

அந்த உரையாடல் நடந்ததைத் திரு புட்டின் செய்தியாளர் கூட்டத்தின்போது உறுதிசெய்தார்.

திரு புட்டின், திரு சி இருவருக்குமே 72 வயதாகிறது.

பதவி விலகுவது குறித்து இருவருமே ஏதும் தெரிவித்ததில்லை.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்