Skip to main content
கொட்டாவி விடுவது ஆபத்து?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கொட்டாவி விடுவது ஆபத்து?

வாசிப்புநேரம் -
கொட்டாவி வருவது இயல்பு.

ஆனால் அதிகமாக கொட்டாவி விட்டுக்கொண்டே இருந்தால் தூக்கத்தில் பற்றாகுறை இருக்கிறது என்று அர்த்தம்.

தூக்கம் போதவில்லை என்றால் வருங்காலத்தில் உடல்நலம் கெடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தூக்கப் பற்றாக்குறையால் நம் மூளையின் செயல்பாடு பாதிக்கப்படலாம். நீரிழிவு, மனச்சோர்வு, உடல் பருமன், இதயநோய், சிறுநீரகக் கோளாறு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

தூக்கப் பற்றாகுறையால் வேறு பல பிரச்சனைகளும் நேரலாம்.

உதாரணத்துக்கு, வாகனமோட்டிக்குத் தூக்கம் போதவில்லை என்றால் கவனம் சிதறலாம். இது அமெரிக்காவில் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. அமெரிக்காவில் தூக்கப் பிரச்சினையால் ஒவ்வொரு வருடமும் சுமார் 100,000 வாகன விபத்துகள் நடக்கின்றன.

எதனால் தூக்கப் பற்றாக்குறை ஏற்படுகிறது?

மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் தூக்கத்தைப் பாதிக்கும். இதற்குத் தீர்வு காண மருத்துவரின் ஆலோசனையை நாட வேண்டும்.

காப்பியும் மதுவும் அருந்துவது, போதைப்பொருள் பயன்படுத்துவது ஆகிய பழக்கங்களும் தூக்கத்தைப் பாதிக்கக்கூடும்.

எனவே கொட்டாவியைக் கவனிக்கவும்.

அளவுக்கு மிஞ்சினால் கொட்டாவியால் ஆபத்து உண்டு.
 
ஆதாரம் : CNN

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்