Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஒலிம்பிக் 2024: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய சிங்கப்பூர் பேட்மின்ட்டன் வீராங்கனை

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் பேட்மின்ட்டன் வீராங்கனை இயோ ஜியா மின் (Yeo Jia Min) அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார்.

நேர் செட்களில் வெற்றி பெற்ற அவர் குழுப் பிரிவில் முதலிடம் பிடித்தார்.

2012 ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் 16 இடங்களுக்குள் வந்திருக்கும் முதல் சிங்கப்பூர் வீராங்கனை இயோ.

மொரிஷியஸின் கேட் பூ கியூனை (Kate Foo Kune) நேர் செட்களில் வீழ்த்தினார் இயோ.

செட் விவரம் 21 -12, 21 - 6

சிங்கப்பூரின் ஆடவர் பேட்மின்ட்டன் வீரர் லோ கீன் இயூ (Loh Kean Yew) அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று (31 ஜூலை) பின்னேரம் El Salvadorஇன் உரியேல் கஞ்சுராவை (Uriel Canjura) எதிர்கொள்கிறார் லோ.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்