Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உடற்குறையுள்ளோர் ஒலிம்பிக் : 50 மீட்டர் மல்லாந்த நீச்சல் - இறுதிச் சுற்றில் தங்கம் வென்றார் யிப் பின் சியூ

சிங்கப்பூரின் யிப் பின் சியூ (Yip Pin Xiu), S2 ரக 50 மீட்டர் மல்லாந்த நீச்சலின் இறுதிச் சுற்றில் தங்கம் வென்றுள்ளார்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் யிப் பின் சியூ (Yip Pin Xiu), S2 ரக 50 மீட்டர் மல்லாந்த நீச்சலின் இறுதிச் சுற்றில் தங்கம் வென்றுள்ளார்.

ஒரு நிமிடம், பூஜ்யம் இரண்டு புள்ளி பூஜ்யம் நான்கு விநாடி நேரத்தில் முடித்து, முதலிடத்தைப் பிடித்தார் யிப்.

அந்தப் போட்டியின் நடப்பு வெற்றியாளரும் அவரே.

தோக்கியோ போட்டிகளில் Yip வென்றுள்ள இரண்டாவது தங்கப் பதக்கம் இது.

S2 ரக 100 மீட்டர் மல்லாந்த நீச்சலில் அவர் சென்ற வாரம் தங்கம் வென்றார்.

2016ஆம் ஆண்டில் நடைபெற்ற உடற்குறையுள்ளோர் ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு தங்கம் வென்ற முதல் சிங்கப்பூரர் எனும் பெருமையை அவர் பெற்றார்.

அந்தப் போட்டிகளில் இரண்டு உலகச் சாதனைகளையும் அவர் புரிந்தார்.



meWATCH சேவையின் 14 சிறப்பு ஒளிவழிகளில் தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளை நேரடியாகக் காணமுடியும்.
mewatch.sg/tokyo2020 என்ற இணையத்தளத்தில் பதிந்துகொள்ளவும்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்