அமெரிக்கா: இளம் கைதி மரணம் - காவல்துறையினர், மருத்துவ ஊழியர்கள் சிலர் மீது குற்றச்சாட்டு
வாசிப்புநேரம் -

(கோப்புப் படம்: Jeremy Long)
அமெரிக்காவின் வெர்ஜினியா மாநிலத்தில் 28 வயது கறுப்பின ஆடவரைக் கொலைசெய்த சந்தேகத்தின் பேரில் 3 மருத்துவமனை ஊழியர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கொலைசெய்யப்பட்டதாகக் கூறப்படும் இர்வோ ஓட்டியேனோ (Irvo Otieno) என்ற ஆடவர் ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்தைச் சேர்ந்தவர்.
சந்தேக நபர்கள் 23 வயதுக்கும் 34 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். அவர்கள் நேற்று (16 மார்ச்) கைதுசெய்யப்பட்டனர். தற்போது அவர்கள் பிணையற்ற தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஓட்டியேனோவின் குடும்பம் அவரின் மரணம் தொடர்பான கண்காணிப்புக் கேமரா பதிவுகளைக் கண்டதாக வழக்கறிஞர்கள் கூறினர். கேமராவில் அதிகாரிகள் அவரை மூச்சுத்திணறச் செய்யும் காட்சி பதிவாகியிருந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
காணொளியைக் கண்ட அவரின் தாயார், தம் மகன் நாயைவிட மோசமாக நடத்தப்பட்டதாகச் சொன்னார்.
இம்மாதம் 6ஆம் தேதி மனநல நிலையத்தில் ஓட்டியேனோ மாண்டார். அவர் Henrico County சிறையிலிருந்து அங்கு இடமாற்றப்பட்டபோது மாண்டதாகக் கூறப்படுகிறது.
அவரது மரணத்தின் தொடர்பில் மருத்துவமனை ஊழியர்கள், காவல்துறை அதிகாரிகள் சிலர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.