Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

"உக்ரேனியப் பகுதிகள் நேட்டோ கூட்டணியின் அதிகாரத்துக்குக் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்"

வாசிப்புநேரம் -
உக்ரேனியப் பிரதமர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelensky) தமது கட்டுப்பாட்டில் உள்ள உக்ரேனியப் பகுதிகள் நேட்டோ கூட்டணியின் அதிகாரத்துக்குக் கீழ் கொண்டுவரப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அவ்வாறு செய்வதன் மூலம் கடுமையான போரை நிறுத்த முடியும் என்றார் அவர்.

Sky News செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் நேட்டோ உறுப்பு நாடாக இணைவதற்கான வாய்ப்பை உக்ரேன் ஏற்குமா என்று கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த திரு ஸெலென்ஸ்கி நேட்டோவில் இணைவதற்கான வாய்ப்பு முழு உக்ரேனுக்கும் வழங்கப்படவேண்டும் என்றார்.

அதன் பிறகு ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள தனது பகுதிகளை அரசதந்திர வழிகள் மூலம் திரும்பப் பெற உக்ரேன் முயற்சி செய்யும் என்று திரு ஸெலென்ஸ்கி குறிப்பிட்டார்.

ரஷ்யா எஞ்சியுள்ள இதர பகுதிகளை ஆக்கிரமிக்க முயற்சி செய்வதைத் தடுக்க நேட்டோ கூட்டணி உத்தரவாதம் தரவேண்டும் என்றும் அவர் சொன்னார்.

உக்ரேனில் ஐந்தில் ஒரு பகுதி ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

தனது படைகள் ஆக்கிரமித்துள்ள பகுதிகளைத் தன்னிடம் ஒப்படைத்துவிடும்படி ரஷ்யா கேட்கிறது.

நேட்டோ கூட்டணியில் இணையும் திட்டத்தை உக்ரேன் கைவிட்டால்தான் போர் நிறுத்தப்படும் என்று ரஷ்யா சொல்கிறது.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்