Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ரஷ்யாவுடன் இணையவிருக்கும் உக்ரேனியப் பகுதிகள் குறித்து ஸெலென்ஸ்கி அவசர உச்சநிலைச் சந்திப்பு நடத்துவார்

வாசிப்புநேரம் -
ரஷ்யாவுடன் இணையவிருக்கும் உக்ரேனியப் பகுதிகள் குறித்து ஸெலென்ஸ்கி அவசர உச்சநிலைச் சந்திப்பு நடத்துவார்

(கோப்புப் படம்: Ukrainian Presidential Press Office via AP)

உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி இன்று (30 செப்டம்பர்) அவசர உச்சநிலைச் சந்திப்பை நடத்தவிருக்கிறார். 

4  உக்ரேனிய வட்டாரங்களைத் தன்னுடன் இணைக்கும் ரஷ்யாவின் திட்டத்தின் தொடர்பில் முக்கிய, அடிப்படை முடிவுகள் அந்தச் சந்திப்பில் எடுக்கப்படும் என்று அந்நாட்டின் தேசியப் பாதுகாப்பு, தற்காப்பு மன்றத்தின் செயலாளர் தெரிவித்தார். 

இதற்கிடையே உக்ரேனின் 4 வட்டாரங்களை அதனுடன் இணைக்கும் ஆவணங்களில் ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புட்டின் கையெழுத்திடுவார் என்று கிரம்ளின் தெரிவித்துள்ளது.  

இந்நிலையில் உக்ரேனிய வட்டாரங்களை ரஷ்யாவுடன் இணைப்பது குறித்து மாஸ்கோ நடத்திய பொதுவாக்கெடுப்பு சட்டவிரோதமானது என்றும், உக்ரேனிடம் இருந்து வலுவான பதிலடி வரும் என்றும் திரு ஸெலென்ஸ்கி மீண்டும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்