Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உக்ரேன் ராணுவம் பற்றிய Amnesty Internationalஇன் குறைகூறல்களைச் சாடிய அதிபர் ஸெலென்ஸ்கி

வாசிப்புநேரம் -

உக்ரேன் ராணுவத்தைப் பற்றி Amnesty International அமைப்பு முன்வைத்த குறைகூறல்களை அதிபர் வொலோடமிர் ஸெலென்ஸ்கி சாடியிருக்கிறார்.

குடியிருப்பாளர் பகுதிகளில் ராணுவம் தளங்களை அமைத்திருப்பதாக மனித உரிமைக் குழுவான அது கூறியிருந்தது.

 அதனால் பொதுமக்களுக்கு ஆபத்து நேரக்கூடும் என்று அந்த அமைப்பு தெரிவித்தது.

ரஷ்யா உக்ரேன் மீது தாக்குதல் நடத்துவதை அது ஆதரிப்பதாகத் திரு.ஸெலென்ஸ்கி சொன்னார்.

பழியை ரஷ்யாவிடமிருந்து உக்ரேனுக்கு மாற்ற Amnesty International முயல்வதாக அவர் கூறினார்.

சண்டை நடக்கும் இடங்களில் பொதுமக்களை உக்ரேன் அனுமதிப்பதாக அது சாடியிருந்தது. 

பள்ளிகள், குடியிருப்புக் கட்டடங்கள் ஆகியவை சண்டை நடைபெறும் இடங்களிலிருந்து தள்ளி இருப்பதாகவும் ராணுவத் தரப்பினர் அவற்றில் இருக்கக்கூடாது என்றும் Amnesty International அமைப்பு சொன்னது.

உக்ரேனியப் படைவீரர்களுக்கு வேறு இடங்கள் இருக்கக்கூடும் என்றும் அவற்றைப் பயன்படுத்தவில்லை என்றும் அது தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்