காதலர் தினம் - பழைய உலோகத்தில் உருகும் காதல்
வாசிப்புநேரம் -
இன்று காதலர் தினம்.
காதலர்கள் வழக்கமாக ரோஜாக்களைப் பகிர்ந்துகொள்ளவார்கள்.
ஆனால் ஆப்பிரிக்க நாடான ஸிம்பாப்வேவில் (Zimbabwe) இந்த வழக்கம் மாறிவிட்டது.
பண நோட்டுகளைக் கொண்ட மலர்க்கொத்து.
பழைய உலோகத்தில் ஆபரணங்கள் என்று பரிசுகள் அங்கு மாறிவிட்டன.
பூக்கடைகளில் பூக்களுக்குப் பதிலாகப் பண நோட்டுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட பணக்கொத்துகளே அதிகம் காணப்படுகின்றன.

50 டாலர் நோட்டுகளை முக்கோண வடிவில் சுருட்டி, மூங்கில் குச்சிகளில் மலர்ந்த ரோஜாப் பூக்களைப்போல் அழகாக அடுக்கி அதனுடன் சில பூக்களையும் வைத்துப் பணக்கொத்துகளை உருவாக்குகின்றனர் பூக்கடைக்காரர்கள்.
TikTok போன்ற செயலிகளில் இத்தகைய பணப் பூங்கொத்துகள் பிரபலமாகிவருகின்றன.
அதன் தாக்கம் தற்போது ஸிம்பாப்வேவிலும் காணப்படுகிறது.
அதோடு நின்றுவிடவில்லை.
பழைய உலோகப் பொருள்களும் உபரிப்பாகங்களும் காதலர் தினப் பரிசுகளாக மாற்றப்படுகின்றன.
இதய வடிவிலான மோதிரங்கள், ஒயின் போத்தல்களை வைக்கும் கலன் உட்பட இன்னும் பல ஆபரணங்கள் தயாரிக்கப்படுகின்றன.
தூக்கியெறிப்படும் உலோகங்கள் தற்போது பளிச்செனப் பரிசாக மாறி பொக்கிஷமாகப் பார்க்கப்படுகின்றன.
இது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விழிப்புணர்வையும் ஒருவகையில் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனால் கென்யாவில் (Kenya) பண நோட்டுகளைப் பூங்கொத்து போல் மாற்றி விற்க அனுமதியில்லை.

ஆதாரம் : AP