நியூயார்க் நகர மேயராக ஸோரன் மம்தானி தேர்வு
அமெரிக்காவில் நியூயார்க் (New York) நகர மேயர் தேர்தலில் ஜனநாயக வேட்பாளர் ஸோரன் மம்தானி (Zohran Mamdani) வெற்றி பெற்றுள்ளார்.
அவரே நகரின் முதல் முஸ்லிம் மேயர்.
தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் நியூயார்க் மேயரும் கூட.
34 வயது மம்தானி அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதி பதவியேற்கும்போது நகரின் ஆக இளைய மேயர் என்ற பெருமையையும் பெறுவார்.
நகர மேயர் தேர்தலில் அவர் சுயேச்சை வேட்பாளர் ஆண்ட்ரு குவோமோ (Andrew Cuomo), குடியரசுக் கட்சியின் கர்டீஸ் சிலிவா (Curtis Sliwa) ஆகியோருக்கு எதிராகப் போட்டியிட்டார்.
மம்தானிக்குக் கடும் விமர்சனம் அளித்தவர்களில் ஒருவர் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்.
மம்தானி கம்யூனிஸ்ட் கொள்கைகளைப் பின்பற்றும் ஒருவர் என்றும் அவர் வெற்றிபெற்றால் நியூயார்க் நகருக்கு நிதியளிக்கத் தாம் தயங்கலாம் என்றும் திரு டிரம்ப் கூறியிருந்தார்.