உணவுக்கடையில் பாட்டிக்கு உதவும் சிறுவன்

Facebook/Chan Chun Sing
உணவங்காடியில் பாட்டி நடத்தும் கஞ்சிக் கடையில் உதவும் 12 வயதுச் சிறுவன் இணையவாசிகளின் மனத்தைக் கொள்ளையடித்துள்ளார்.
தற்காப்பு அமைச்சரும் தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு சான் சுன் சிங் பகிர்ந்த காணொளியில் சிறுவன் இடம்பெற்றிருந்தார்.
ஹாலந்து டிரைவ் உணவங்காடிக்குச் சென்ற திரு சான் சிறுவனுடன் பேசுவதைக் காணொளியில் பார்க்கமுடிகிறது.
12 வயது மெங் யூ (Meng Yew) பள்ளிக்குச் சென்று படிக்கிறார்... கிடைக்கும் நேரத்தில் பாட்டியின் கடையிலும் உதவுகிறார் என்று திரு சான் சொன்னார்.
மெங் யூ எப்போதும் பாட்டி நினைப்பில் இருக்கும் சிறுவன் என்று திரு சான் பாராட்டினார்.
காணொளியைக் கண்ட இணையவாசிகளும் சிறுவனைப் பாராட்டினர்.
"கைத்தொலைபேசியுடன் விளையாடாமல் பாட்டியுடன் நேரம் செலவழிக்கும் சிறுவன் சிறப்பு.."
"இந்தத் தலைமுறையில் சூடான வானிலையில் கடையில் வேலைசெய்யும் பிள்ளைகளைப் பார்ப்பது அரிது. இது பாராட்டுக்குரியது,"
என்று அவர்கள் தெரிவித்தனர்.