Skip to main content
அறிவுக்கும் ஆற்றலுக்கும் மேடையாக ‘அரிமா 2026’
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

இளையர் குரல் exclusive

அறிவுக்கும் ஆற்றலுக்கும் மேடையாக ‘அரிமா 2026’

வாசிப்புநேரம் -
அறிவுக்கும் ஆற்றலுக்கும் மேடையாக ‘அரிமா 2026’

படம்: நந்தினி

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

தமிழ்மொழியையும் தமிழர் பண்பாட்டையும் இளம் தலைமுறையினரிடம் புதுமையான முறையில் கொண்டுசேர்க்கும் நோக்கத்தில் ‘அரிமா 2026’ எனும் போட்டி விறுவிறுப்பாக நடந்தேறியது.

சிங்கப்பூர் தமிழ் இளைஞர் மன்றம் (STYC) அந்தப் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

“Your Roar. Your Roots. Your Rise.” என்ற கருப்பொருளுடன் போட்டி நடைபெற்றது.

உயர்நிலை 3 முதல் 5 வரை பயிலும் மாணவர்களுக்காக அந்தப் போட்டி வடிவமைக்கப்பட்டது.
Related article image
படம்: நந்தினி
வெறும் போட்டியாக அல்லாமல் தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு, வரலாறு, பொதுஅறிவு ஆகியவற்றை மகிழ்ச்சியாகக் கற்றுக்கொள்ளும் அனுபவத்தை வழங்குவதே நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.

மாணவர்களின் குழு ஒருங்கிணைப்பு, துரித சிந்தனை, தன்னம்பிக்கை, பேச்சுத் திறன் போன்வற்றை வளர்க்கும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டி நான்கு விறுவிறுப்பான சுற்றுகளைக் கொண்டிருந்தது.

‘மின்னல் முரளி’ சுற்றில் வேகமும் அறிவும் சோதிக்கப்பட்டது.

‘ஒழுங்கா சொல்லு மாப்பு, வச்சிடாத ஆப்பு!’ சுற்றில் சொல்லை நேரடியாகக் கூறாமல் அதன் இணைச்சொற்கள் மூலம் கண்டுபிடிக்கும் திறன் பரிசோதிக்கப்பட்டது.

'கதைப்போமா?’ சுற்றில் போட்டியாளர்கள் தங்கள் கருத்துகளை முன்வைத்து நடுவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.

மறை நிலை’ எனும் ஆச்சரியச் சுற்று மாணவர்களின் படைப்பாற்றல், தகவல் அமைப்புத் திறன், தமிழ்ப் புலமை ஆகியவற்றுக்குச் சவாலாக அமைந்தது.

தமிழ்க் கற்றலைப் புத்தக எல்லைக்கு அப்பால் கொண்டு சென்று இளையர்களின் அறிவையும் மொழிப்பற்றையும் கொண்டாடும் அரங்கமாக ‘அரிமா 2026’ அனைவரின் பாராட்டையும் பெற்றது.
Related article image
படம்: நந்தினி
Related article image
படம்: நந்தினி
Related article image
படம்: நந்தினி
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்