இளையர் குரல் exclusive
"தமிழ்... வகுப்பறை மொழியல்ல; வாழும் மொழி"
வாசிப்புநேரம் -
படம்: அனு அருணாச்சலம்
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம் (STYC) ஏற்பாடு செய்த 'அரிமா' எனும் போட்டி நிகழ்ச்சி இன்று முதல் முறையாக நடைபெற்றது.
கேலாங் ஈஸ்ட் நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர்நிலை 3 முதல் உயர்நிலை 5 வரை பயிலும் மாணவர்கள் பங்கேற்றனர்.
தங்கள் பள்ளிகளைப் பிரதிநிதித்து 30 மாணவர்கள் சிறு குழுக்களாகக் கலந்துகொண்டனர். ஒவ்வொரு குழுவிலும் தமிழார்வமிக்க பெரியவர் ஒருவரும் இருந்தார்.
இதனால் தலைமுறைகளுக்கு இடையிலான கற்றல் அனுபவம் மேம்படும் என்று ஏற்பாட்டுக் குழுவினர் கூறினர்.
சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றத்தின் அறங்காவலரும் தமிழாசிரியருமான திரு விஸ்வலிங்கம் சிறப்பு விருந்தினராக வருகைதந்தார்.
இலக்கியம், வரலாறு, கலாசாரம் எனப் பல்வேறு தலைப்புகளை மையமாகக்கொண்டு போட்டி அங்கங்கள் இடம்பெற்றன.
"ஊன்சோறு என்றால் பிரியாணியா?"
"Sugarcaneக்குத் தமிழில் என்ன?"
என்றெல்லாம் மாணவர்கள் அவ்வப்போது குழம்பி நின்றனர்.
இந்த நிகழ்ச்சி தமிழ்ப்பற்றை ஊக்குவித்துத் தமிழுக்குப் பங்காற்றவேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கியதாக அதில் கலந்துகொண்ட மாணவி ஒருவர் தெரிவித்தார்.
தமிழைச் சுவாரசியமாகக் கற்கவும் பேச்சுத் திறனை வளர்த்துக்கொள்ளவும் நிகழ்ச்சி உதவியதாகச் சில மாணவர்கள் கூறினர்.
மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு இயல்பாகத் தமிழில் பேசுவதைக் கண்டு தமிழ் என்பது வகுப்பறை மொழியல்ல; வாழும் மொழி என்று நடுவர்கள் நிகழ்ச்சியின் நிறைவில் சொன்னார்கள்.
ராபிள்ஸ் பெண்கள் பள்ளியைச் சேர்ந்த இரு குழுக்கள் முதலாம் இடத்தையும் மூன்றாம் இடத்தையும் பிடித்தன.
புக்கிட் பாத்தோக் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் இரண்டாம் பரிசைத் தட்டிச் சென்றனர்.
தங்களுடைய இந்தப் புதிய முயற்சி மக்களின் வர்வேற்பையும் மாணவர்களின் ஆதரவையும் பெற்றதை எண்ணி ஏற்பாட்டுக் குழுவினர் பெருமிதம் கொண்டனர்.

ஆதாரம் : Mediacorp Seithi