Skip to main content
தந்தையிடம் சொல்ல மறந்தது?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

இளையர் குரல் செய்தியில் மட்டும்

தந்தையிடம் சொல்ல மறந்தது?

வாசிப்புநேரம் -
தந்தையிடம் சொல்ல மறந்தது?

படங்கள்: பவித்ரா, கிரிஷ்மிதா, சிட்டாள், லாவண்யா, பிரசன்னா

இன்று தந்தையர் தினம்....

எதையும் எதிர்பார்க்காமல் பிள்ளைகளுக்குப் பணி செய்யும் தந்தையர் பலர் நம்மிடையே உள்ளனர்.

சில நேரங்களில் அவர்களுக்கு நன்றி சொல்ல மறந்துவிடுகிறோம்..

தந்தையர் தினத்தன்று மனந்திறந்து பேசினர் இளையர்கள் சிலர்....

பவித்ரா

நீங்கள் காணாத உலகை, என்னைப் பார்க்க வைத்தீர்கள். நீங்கள் என் வயதில் இருந்தபோது அனுபவிக்காததை நான் அனுபவிக்கவேண்டும் என்று உழைத்தீர்கள். அம்மா என்றால் அன்பு, அரவணைப்பு.... தந்தை என்றால் பண்பு, தைரியம்...கற்றுத்தந்த வாழ்க்கைப் பாடங்களுக்கு நன்றி!
படம்: பவித்ரா
சிட்டாள்

தந்தையிடம் சொல்ல மறந்தது- நன்றி...
இன்று வரை எனக்காக நிறைய செய்திருக்கிறார். ஆனால் நான் ஒரு நாள்கூட நன்றி சொன்னதில்லை.. அனைத்துக்கும் நன்றி!
படம்: சிட்டாள்
பிரசன்னா

உங்கள் கடின உழைப்பையும் அக்கறையையும் கவனித்திருக்கிறேன்.

வாழ்க்கை கஷ்டமாக இருந்தாலும் எல்லா சிக்கல்களிலிருந்தும் எங்களைப் பாதுகாத்தீர்கள்...அதற்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
படம்: பிரசன்னா
லாவண்யா

அறம், அன்பு, அறிவு அனைத்தையும் அள்ளிக் கொடுத்தீர்கள்... அயராமல் உழைத்து என்னை ஆளாக்கிய தந்தைக்கு வாழ்த்துகள்!
படம்: லாவண்யா
கிரிஷ்மிதா

அப்பா, நான் உங்களை நேசிக்கிறேன். உங்கள் வழிகாட்டுதலை எப்போதும் நினைவில் கொள்வேன்... உங்களைப் பெருமைப்படுத்துவேன் என்று நம்புகிறேன்!
படம்: கிரிஷ்மிதா
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்