Skip to main content
புதிய பட்டதாரிகள் வேலைகளைப் பெற எவ்வாறு உதவலாம்?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

இளையர் குரல்

புதிய பட்டதாரிகள் வேலைகளைப் பெற எவ்வாறு உதவலாம்?

வாசிப்புநேரம் -
புதிய பட்டதாரிகள் வேலைகளைப் பெற எவ்வாறு உதவலாம்?

Pixabay

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

புதிய பட்டதாரிகள் வேலைகளைப் பெறுவதற்கு எவ்வாறு உதவலாம் என்று சிங்கப்பூர்ப் பொருளாதார மீள்திறன் பணிக்குழு ஆராய்ந்துவருகிறது.

வர்த்தக, தொழில் மூத்த துணையமைச்சர் கான் சியோவ் ஹுவாங் (Gan Siow Huang) அரசாங்கம் வேலைவாய்ப்பு நிலவரத்தை அணுக்கமாய் கவனித்துவருகிறது என்று தெரிவித்தார்.

கூடுதல் ஆதரவுத் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படுவதாகவும் அவர் சொன்னார்.

துணைப் பிரதமர் கான் கிம் யொங் (Gan Kim Yong) வழிநடத்தும் பொருளாதார மீள்திறன் பணிக்குழு மாணவர்களின் வேலைவாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து வருகிறது.

தற்போதைய வேலைச்சூழல் நிலையாகவே இருப்பதாய் துணையமைச்சர் கான் கூறினார்.

நிறுவனங்கள் இன்னமும் வேலைக்கு ஆள் எடுக்கின்றன என்று அவர் சொன்னார்.

பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களுடன் நடத்திய கலந்துரையாடலுக்குப் பிறகு திருவாட்டி கான் செய்தியாளர்களிடம் பேசினார்.

புதிய பட்டதாரிகள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.

வேலை தேடும் முயற்சிகளை முடிந்தால் விரிவுபடுத்தவும் தேவையெனில் வாழ்க்கைத்தொழில் பயிற்றுவிப்பாளரை நாடவும் அவர் ஆலோசனை கூறினார்.

மேலும் செய்திகள் கட்டுரைகள்