Skip to main content
"இணையத்தில் பரவும் Ghibli படங்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

இளையர் குரல் செய்தியில் மட்டும்

"இணையத்தில் பரவும் Ghibli படங்கள் - உயிரோவியக் கலை அதன் தனித்துவத்தை இழந்துவிடுமோ எனும் கவலை ஏற்படுகிறது"

வாசிப்புநேரம் -

அண்மையில் ChatGPTஇல் உருவாக்கப்படும் Ghibli படங்கள் மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. 

எங்கும் எதிலும் Ghibli படங்கள்...

அதைப் பற்றி இளையர்கள் சிலரிடம் கேட்டோம்...

"Ghibli படத்தைப் பயன்படுத்துவதில் ஆர்வம் கூடியுள்ளது. இது பார்க்க என்னைப் போன்றே உள்ளது. என்னிடம் தெரியும் சின்னஞ்சிறு அம்சங்களையும் அது விட்டுவைப்பதில்லை."

-லோகேஷ்வரன்

"கண்மூடி கண் திறப்பதற்குள் ChatGPT நமது படங்களை அழகான Ghibli படங்களாக மாற்றுகிறது....ஆனால் உயிரோவியக் கலை அதன் தனித்துவத்தை இழந்துவிடுமோ எனும் கவலை ஏற்படுகிறது."

-ஸ்ரேயா
"ChatGPTஇல் உருவாக்கப்படும் Ghibli படங்களினால் உயிரோவியத்தின் அழகு போய்விடுகிறது. அது வெறும் trendஆக பார்க்கப்படுகிறது. அது இனி எவ்வளவு காலத்திற்குத் தாக்குப்பிடிக்குமோ? பொறுத்திருந்து பார்ப்போம்!"

-கமலி
"Ghibli படங்களைப் பார்க்க வேடிக்கையாகவும் அதேசமயம் பயமாகவும் உள்ளது. இது Studio Ghibli கலைஞர்களின் கடின உழைப்பைச் சில நொடிகளில் வீணடிக்கிறது."

-வீரா
இணையத்தில் பரவும் Ghibli படங்கள் பதிப்புரிமை குறித்த கேள்விகளை எழுப்புகின்றன. Studio Ghibli கலைஞர்களின் அயரா உழைப்புக்கு முட்டுக்கட்டையிடும் வகையில் உள்ளது.

-பிரித்திகா
"நான் இதை ஆதரிப்பதில்லை. Studio Ghibli உயிரோவியக் கலைக்கூடத்தின் உரிமையாளர் ஹயாவ் மியாஸாக்கிக்கே இதில் உடன்பாடில்லை. இது அவரது பல வருட கடின உழைப்பை அவமதிப்பது மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள கலைஞர்களின் கடின உழைப்பையும் அவமதிக்கிறது."

-ஆடிலா
"Ghibli படங்கள் மீதுள்ள மோகத்தை வார்த்தைகளால் வருணிப்பது சிரமம். படங்களை எளிதில் உயிரோவியமாக்கக்கூடிய அம்சம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரை ஈர்த்துள்ளது.

-கீதாஷினி
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்