Skip to main content
சமூக ஊடகங்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு மலையேறிய சிறுவர்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

இளையர் குரல் செய்தியில் மட்டும்

சமூக ஊடகங்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு மலையேறிய சிறுவர்கள்

வாசிப்புநேரம் -
மலை ஏறும் சவால்…
அதில் உற்சாகமாகக் கலந்துகொண்ட சிறுவர்கள்.

தாறுமாறு ரன்னர்ஸ் (Thaarumaaru Runners) குழுவினர் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சி ஹோர்ட் பார்க்கில் (Hort Park) இன்று காலை நடைபெற்றது.

3 முதல் 12 வயதிற்கு இடைப்பட்ட சுமார் 50 சிறுவர்கள் பங்கெடுத்த நிகழ்ச்சியில் மலை ஏறுதல், உடற்பயிற்சி ஆகியவை இடம்பெற்றன.

கெண்ட் ரிட்ஜ் (Kent Ridge) உச்சியை அடைந்ததும் சிறுவர்களுக்குப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் ஹமிது ரசாக் (Hamid Razak) சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கு முக்கியத்துவம் தரும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் குடும்பப் பிணைப்பை மேம்படுத்துகின்றன என்று டாக்டர் ஹமிது கூறினார்.

பள்ளி விடுமுறையை முன்னிட்டு
ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சிக்குப் பெற்றோர்கள் பிள்ளைகளுடன் உற்சாகமாகக்
கலந்துகொண்டது மகிழ்ச்சியளிப்பதாய்த் தாறுமாறு ரன்னர்ஸ் குழுத் தலைவர் திரு ரிச்சர்ட் மோகன் சொன்னார்.

நிகழ்ச்சியில் பங்குபெற்ற பெற்றோர் திரு சர்குணன் சண்முகம், சமூக ஊடகத்தின் தாக்கம் மேலோங்கி இருக்கும் காலக்கட்டத்தில் இத்தகைய நிகழ்ச்சிகள் சிறுவர்களிடையே ஆரோக்கிய வாழ்க்கைமுறையில் ஆர்வம்கொள்வதற்கு உதவுகின்றன என்று கூறினார்.
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்