இணையத்தில் இளையர்களைக் கவர்ந்த செய்திகள், காணொளிகள்

படம்: சரண் சந்திரா
அண்மையில் இணையத்தில் இளையர்கள் விரும்பிப் படித்த செய்திகள், பார்த்த காணொளிகள் யாவை?
அவற்றுள் சில....
1. இளையர் பொங்கல் திருவிழா
(LISHA) எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மரபுடைமைச் சங்கத்தின் ஏற்பாட்டில் 5 இளையர் குழுக்கள் இணைந்து நடத்திய இளையர் பொங்கல் திருவிழா
உலகெங்கும் குறிப்பாக இளையர்கள் மத்தியில் பிரபலமான மூ டெங் (Moo Deng) நீர்யானை பிறந்து 6 மாதமாகிறது. அதைக் கொண்டாடும் வகையில் அதற்கு அடையாள அட்டை கிடைத்தது!
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை பல சிறப்பு அம்சங்களுடன் பொங்கல் நிகழ்ச்சியை நடத்தியிருந்தது.
பிரேசிலில் தந்தையும் மகளும் தக்க நேரத்தில் உயிர்தப்பிய காணொளி இளையர்கள் மத்தியில் பேசுபொருளானது. சாலையைக் கடக்கவிருந்த இருவரும் தரையில் கிடந்த காசைக் குனிந்து எடுத்தனர். காசை எடுக்காமல் சென்றிருந்தால், அவ்வழியே சென்ற கார் அவர்களை மோதியிருக்கும்.
5. "செய்தி"யின் பொங்கல் போட்டி
மீடியாகார்ப் தமிழ்ச்செய்திப் பிரிவு பொங்கல் திருநாளை ஒட்டித் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காக “பொங்கலோ பொங்கல் 2025” எனும் போட்டியை நடத்தி வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்தது.
வெற்றியாளர்களின் விவரங்களை அறிய பின்வரும் இணைப்புகளைக் காணவும்:
"செய்தி"யின் பொங்கல் போட்டி வெற்றியாளர்கள் - தொடக்கநிலை 1,2,3
"செய்தி"யின் பொங்கல் போட்டி வெற்றியாளர்கள் - தொடக்கநிலை 4, 5