Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

இளையர் குரல் செய்தியில் மட்டும்

"கைக்குக் கட்டுப்போட்டது போல் இருந்தாலும் Instagram Teen Accounts நல்லதுதான்"

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் 'Instagram Teen Accounts' எனும் இளையர் கணக்குகள் அறிமுகமாகியுள்ளன.

13 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட இளையர்கள் அடுத்த சில மாதங்களில் இளையர் கணக்குகளின் கீழ் வருவர்.

இளையர்கள் எவற்றைப் பார்வையிடுகின்றனர், யாரெல்லாம் அவர்களைத் தொடர்புகொள்ளலாம் முதலிய பாதுகாப்பு அம்சங்கள் அவற்றில் உண்டு.

அது குறித்து இளையர்கள் என்ன நினைக்கிறார்கள்?

'செய்தி'யுடன் கருத்துகளைப் பகிர்ந்தனர் இளையர்கள் சிலர்...

"மோசடி, இணைய அச்சுறுத்தல் சம்பவங்கள் ஆகியவற்றிலிருந்து இளையர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளலாம். இரவு 10இலிருந்து காலை 7 மணி வரை Instagramஇல் அறிவிப்புகளைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கும் புது அம்சம் பலனளிக்கும்; மாணவர்கள் மறுநாள் பள்ளிக்குச் செல்லும்போது கவனச்சிதறல் ஏற்படாது"

-சாதனா

"இதனை முழுமனத்தோடு ஆதரிக்கிறேன். இளையர்கள் சமூக ஊடகத் தளங்களில் எவ்வளவு நேரம் செலவிடுகின்றனர் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். சமூக ஊடகத்தைப் பொறுப்பான முறையில் கையாள்வதன் முக்கியத்துவத்தை இந்தப் புதிய திட்டம் வலியுறுத்துகிறது"

- பவித்ரா

"தனிநபர் சுதந்திரம் பறிபோனது போல் உள்ளது. எந்நேரமும் என் நடவடிக்கைகளை யாரோ உற்றுக் கவனிப்பது போல் இருக்கும்"

- வீரா

"ஆள் அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து இளையர்கள் தகாத செய்திகளைப் பெறுவதைக் கட்டுப்படுத்தலாம். பெற்றோர் பிள்ளைகளை இன்னும் அணுக்கமாகக் கவனிக்கலாம். கைக்குக் கட்டுப்போட்டது போல் இருந்தாலும் இது நல்லதுதான்"

- விஷாந்த்

"சில Instagram பதிவுகளைக் கண்டு இளையர்கள் தங்களைப் பிறருடன் ஒப்பீடு செய்யலாம். இது மன உளைச்சல், பதற்றம் ஆகியவற்றை ஏற்படுத்தலாம்; மனநலத்தைப் பாதிக்கலாம். பெற்றோர் Instagramஇல் அவர்களது நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டால் அவற்றைத் தவிர்க்கலாம்"

-ஐஸ்வர்யா
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்