Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

இளையர் குரல் exclusive

சிங்கப்பூரர்களைத் தேம்பித் தேம்பி அழ வைத்த How To Make Millions Before Grandma Dies...சொல்லிக்கொடுத்தது என்ன?

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரர்களைத் தேம்பித் தேம்பி அழ வைத்த  How To Make Millions Before Grandma Dies...சொல்லிக்கொடுத்தது என்ன?

(படம்:8days) 

"திரையரங்கமே கண்ணீரால் நிரம்பியிருந்தது... நானும் தேம்பித் தேம்பி அழுதேன்" என்றார் 'செய்தி'யிடம் பேசிய குளோவி.

11 நாள்களுக்குள் சிங்கப்பூரின் வசூல் சாதனையை முறியடித்தது தாய்லந்துத் திரைப்படமான "How to Make Millions Before Grandma Dies".

மே 30ஆம் தேதி வெளியிடப்பட்ட படம் சிங்கப்பூரில் இதுவரை கண்டிராத வசூல் சாதனை படைத்த தாய்லந்துத் திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றது.

ஜூன் 23 நிலவரப்படி சிங்கப்பூரில் திரைப்படத்தின் வசூல் 4.5 மில்லியன் வெள்ளி.

ஆச்சரியம் என்னவென்றால் திரைப்படம் இளையர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
Related article image
இந்தப் படத்தில் பாட்டிக்குப் புற்றுநோய் என்று கண்டறியப்படும்.

அரை மனதோடு அவரைப் பார்த்துக்கொள்ள முனைவார் பாட்டியின் பொறுப்பற்ற பேரன்.

ஆனால் பேரனின் நோக்கம் வேறு. பாட்டியின் செல்வத்தில் பங்கு கேட்பதற்காக அக்கறை காட்டுவான்.

காலப்போக்கில் அவனது போலித்தனம் உண்மையான அன்பாக மாறும்.

நோய்வாய்ப்படும் முதியவர்கள், பராமரிப்பில் உள்ள சிரமங்கள், உடன் பிறந்தவர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் என்று பலவற்றைக் காட்டுகிறது படம்.

“சில காட்சிகளில் கண்ணீர் சிந்தினேன். எனது பாட்டியுடன் நான் எப்படி இருக்கிறேன் என்பதைச் சிந்திக்க வைத்தது. நாங்கள் மிகவும் நெருக்கமாக இருக்கிறோம். என்னால் முடிந்தவரை அவரை இன்னும் நன்கு பார்த்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டியது,” என்றார் 'செய்தி'யிடம் பேசிய ஜனனி.

"எளிமையான கதைக் கருவாக இருந்தாலும் படம் முழுவதும் அன்பைக் காட்டும் அடையாளங்கள் நிறைய பயன்படுத்தப்பட்டிருந்தது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. உதாரணத்துக்குத், திரைப்படத்தில் வரும் பாட்டி மாதுளை மரத்தை அவரது பேரன் பிறக்கும்போது நட்டு வைத்திருப்பார். அந்தப் பழங்களை யாரையும் பறிக்க விடமாட்டார். அவரது அன்பை அந்த மாதுளை மரம் வெளிக்கொணர்ந்தது" என்றார் பொன்னி.
Related article image
"தமிழ்ப் படங்களில் இதைவிட மனத்தை உருக்கும் காட்சிகளைப் பார்த்திருக்கிறேன். அதனால் இந்தப் படம் எனக்குப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை,”

என்றார் சுதைஸ்.

படத்தின் வேகம் போதவில்லை என்றும் சிலர் கூறினர்.

“படத்தை பல சமூக ஊடகங்கள் மிகைப்படுத்திவிட்டன என்று நினைக்கிறேன். பல தாய்லந்து நாடகங்களைப் பார்த்திருக்கிறேன். இந்தப் படம் ஒரு நாடகம் போல்தான் இருந்தது. காட்சிகள் மிகவும் மெதுவாக நகர்ந்ததால் எனக்கு அழுகை வரவில்லை," என்றார் ஆடிலா. 

Related article image
(படம்:8days)

படம் எடுக்கப்பட்ட விதத்தில் குறை இருந்தாலும் படத்தில் காட்டப்பட்ட உண்மையான அன்பின் மகத்துவமும் கருத்தும் பிடித்திருந்ததாக 'செய்தி'யிடம் பேசிய இளையர்கள் பலரும் கூறினர்.

சிங்கப்பூரில் மூப்படையும் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது.

வயதான பெற்றோர், தாத்தா பாட்டி, இவர்களுடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்ற ஒரு சிறிய கருத்தைப் படம் பிள்ளைகளின் மனத்தில் விதைத்திருந்தால் அதுவே இதன் வெற்றி என்கின்றனர் விமர்சகர்கள்.

ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்