இளையர் குரல் செய்தியில் மட்டும்
"நாடகத்துறையில் பணம் சம்பாதிக்க முடியுமா?" - மனந்திறந்து பேசிய இளையர்
வாசிப்புநேரம் -

(படம்: டான் தியோ)
அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினம், பணவீக்கம்..
இவற்றுக்கு மத்தியில் நாடகத்துறையில் முழுநேரம்
பணிபுரிந்தால் பணம் சம்பாதிக்க இயலுமா? வாழ்க்கை நடத்தமுடியுமா? எதிர்காலம் நன்றாக இருக்குமா?
இப்படிப் பலர் உள்ளூர் நாடக எழுத்தாளரும் இயக்குநருமான யக்ஞாவிடம் கேட்டிருக்கின்றனர்.
தாம் சந்தித்த சவால்கள், அவற்றைச் சமாளிக்க மேற்கொண்ட உத்திகள் ஆகியவற்றைப் பற்றி 'செய்தி'யுடன் மனந்திறந்து பேசினார் The Necessary Stage நாடகக்குழுவில் பணிபுரியும் யக்ஞா.
"ஆர்வம் இருந்தால் மட்டும் போதாது"
நாடகத்துறையில் நிலைத்து நிற்க வேண்டுமானால் அயரா உழைப்பு, அர்ப்பணிப்பு, அசைக்க முடியாத மனவுறுதி தேவை என்றார் யக்ஞா.
"நாடகத்துறையில் பணிபுரிவது வழக்கத்துக்கு மாறான ஒன்று தான். ஆனால் இளம் வயதிலிருந்தே எனக்கு நாடகத்தில் பேரார்வம். கலைத்துறையில் சம்பாதிக்க முடியுமா என்று பலர் என்னிடம் கேட்டிருக்கின்றனர். பல கதவுகளைத் தட்டினால் வாய்ப்புகள் கிடைக்கும் என நம்புகிறேன். அதுபோக இத்துறையில் அனுபவம் மிகுந்த கலைஞர்களிடம் கற்றுக்கொள்வது முக்கியம். பிறரது கருத்துகளை உள்வாங்கிக்கொண்டு என்னை மேம்படுத்திக்கொள்வது அவசியம்," என்று உணர்வுபொங்கச் சொன்னார் அவர்.
'தடைகளை வாய்ப்புகளாக மாற்றவேண்டும்"
நடிகர்கள் எந்தவொரு முன் அறிவிப்புமின்றி நாடகப் படைப்பிலிருந்து விலகலாம், நாடகத்திற்கு நிதியுதவி கிடைக்காமல் போகலாம்....சில சமயம் நாடகங்களை எழுதும்போது சிந்தனையோட்டம் பாதிப்படையலாம்.
"இந்தத் துறையில் ஏன் காலடியெடுத்து வைத்தேன் என்று நினைவுபடுத்திக்கொள்வேன். நாடகத்தின் மூலம் பலதரப்பட்ட கதைகளைச் சொல்லிப் பிறரது சிந்தனைகளைத் தூண்ட விரும்புகிறேன். அதனால் ஒவ்வொரு தடையையும் வாய்ப்பாக மாற்றியமைக்க முயற்சி மேற்கொள்வேன்" என்று முத்தாய்ப்பாய்ச் சொன்னார் யக்ஞா.
இளையர்களிடம் சொல்ல விரும்புவது....
"எந்த வயதில் வேண்டுமானாலும் நாடகத்துறையில் சேரலாம். அதில் முழுநேரம் வேலை செய்வதற்கு முன்னர் பயில்நிலைப் பயிற்சிக்குச் (internship) செல்வது நல்லது. நாடகப் படைப்புக்கு என்னென்ன தேவைப்படும் என்பதைக் கற்றுக்கொள்ளலாம். இந்தத் துறை உங்களுக்கு உகந்ததா என்பதைத் தெரிந்துகொள்ளலாம்."

ஆதாரம் : Mediacorp Seithi