Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

இளையர் குரல்

நோய்வாய்ப்பட்ட தாயாரைப் பார்த்துக்கொள்ளும் 12 வயது மகன்- நெகிழ்ந்த இணையவாசிகள்

வாசிப்புநேரம் -
பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வது, அவர்களது தேவைகளைப் பூர்த்திசெய்வது...இப்படிப் பல கடமைகள் பெற்றோருக்கு உண்டு...

ஒருவேளை பெற்றோர் நோய்வாய்ப்பட்டால், பிள்ளை மாறாகப் பெற்றோரைப் பார்த்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

மலேசியாவைச் சேர்ந்த இமான் (Iman) பக்கவாதத்தினால் அவதியுறும் தமது தாயாரைப் பராமரிப்பதைக் காட்டும் காணொளி பல இணையவாசிகளை நெகிழ வைத்தது.

12 வயது இமான் எவர் உதவியுமின்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த தாயாரின் அணையாடையை (diapers) மாற்றியதோடு, தாயாரின் தேவைகளைப் பார்த்துப் பார்த்துச் செய்திருக்கிறான்.

காணொளியைக் கண்ட இணையவாசிகள் அந்தச் சிறுவனுக்கு உதவி வழங்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

அந்தப் பெண் ஒற்றைத் தாயார் என்றும் அவருக்கு இரு பிள்ளைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
@norasni31 bila mana depan katil KO seorang pesakit strok.. dan penjaga seorang budak 12 tahun..makan minum tido kat lantai .Allahu kecian tgkk😭#fypviralシ #tiktokviral #beranda #terengganu#sedih #hospital #foryourepage #fyppppppppppppppppppppppp ♬ original sound - Astro Ceria

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்