Skip to main content
மீடியாகார்ப் 'செய்தி'யின் "தமிழில் யோசி, தமிழில் வாசி"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

இளையர் குரல்

மீடியாகார்ப் 'செய்தி'யின் "தமிழில் யோசி, தமிழில் வாசி"- மாணவர்களுக்கான போட்டி நிகழ்ச்சி, வித்தியாசமான அம்சங்களுடன்!

வாசிப்புநேரம் -
மீண்டும் வந்துவிட்டது மீடியாகார்ப் 'செய்தி'யின் "தமிழில் யோசி! தமிழில் வாசி"!

'செய்தி' ஆண்டுதோறும் நடத்தும் "தமிழில் யோசி! தமிழில் வாசி!" நிகழ்ச்சி இவ்வாண்டு வித்தியாசமான அம்சங்களுடன் நடைபெறவிருக்கிறது.

பயிலரங்கு, விளையாட்டுகள், போட்டிகள், பரிசுகள்...
இவை அனைத்தும் மாணவர்களுக்காகக் காத்திருக்கின்றன.

இவ்வாண்டு வெற்றி பெறும் மாணவர்கள் காணொளி/ படங்கள் எடுக்கக் கற்றுக்கொடுக்கும் ஒரு நாள் பயிலரங்கில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுவர்.

ஜூலை மாதம் 19ஆம் தேதி உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நிகழ்ச்சி நடைபெறும்.

14 முதல் 19 வயதுவரை உள்ள மாணவர்களுக்கு நடத்தப்படும் மொழிபெயர்ப்பு நிகழ்ச்சி இது.
செய்தித் துறையில் மொழிபெயர்ப்பது பற்றி மாணவர்கள் தெரிந்துகொள்ள நிகழ்ச்சி வாய்ப்பளிக்கிறது.

சென்ற ஆண்டு நிகழ்ச்சியில் 100க்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சி தேசிய மொழிபெயர்ப்புக் குழு, சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம் ஆகியவற்றின் ஆதரவில் நடைபெறுகிறது.

உயர்நிலைப் பள்ளிகள், தொடக்கக் கல்லூரிகள், பலதுறைத் தொழிற் கல்லூரிகள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விண்ணப்பிக்கலாம்.

ஆசிரியர்கள் TamilDigi [at] mediacorp.com.sg எனும் மின்னஞ்சல் முகவரிக்கு விருப்பத்தைத் தெரிவிக்கலாம்.

மின்னஞ்சலில் பதிவு செய்யும் மாணவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அனுப்பவும். (அதிகபட்சம் 5 மாணவர்கள்)

முதலில் விண்ணப்பம் செய்யும் 100 பேருக்கு மட்டுமே வாய்ப்பு!

மேலும் செய்திகள் கட்டுரைகள்