Skip to main content
அடிக்கடி வேலை மாறும் Gen Z ஊழியர்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

இளையர் குரல்

அடிக்கடி வேலை மாறும் Gen Z ஊழியர்கள் - காரணங்களை விவரிக்கும் நிபுணர்கள்

வாசிப்புநேரம் -
அடிக்கடி வேலை மாறும் Gen Z ஊழியர்கள் - காரணங்களை விவரிக்கும் நிபுணர்கள்
வெளியீடு : 08 Jul 2025 02:48PM புதுப்பிப்பு : 09 Jul 2025 10:18AM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

'Gen Z' ஊழியர்கள் அதிகமாக வேலை மாறுகிறார்கள் என்று சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு அண்மையில் தகவல் வெளியிட்டுள்ளது.

அவர்கள் வேலை மாறுவதற்குச் சில காரணங்களை நிபுணர்கள் முன்வைத்துள்ளனர்.

Z தலைமுறையினர் (Gen Z) என்ற சொல் 28 வயதிற்கு உட்பட்டவர்களைக் குறிக்கும்.

சென்ற ஆண்டு வேலை மாறிய Z தலைமுறையினரின் எண்ணிக்கை 900. 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டால் அது மூன்று மடங்கு அதிகம்.

இளையர்கள் வெவ்வேறு துறைகளில் வேலை செய்து பார்க்க விரும்புவது அவர்களது இயல்பு என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தனிப்பட்டமுறையில் அவர்கள் மதிக்கும் அம்சங்கள், விருப்பங்கள் ஆகியவற்றைச் பொறுத்து Z தலைமுறையினர் வேலை மாறுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

சிலர் 25 வயதிற்குள் மூன்று அல்லது நான்கு முறை வேலை மாறுகிறார்கள்.

பணியிடை மாற்றத்திற்காகக் கொண்டுவரப்பட்ட வாழ்க்கைத்தொழில் மாற்றுத் திட்டத்திய (Career Conversion Programme) Z தலைமுறை ஊழியர்களே அதிகம் பயன்படுத்துகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

2021இல் சுமார் 300 இளையர்களுக்குப் பயனளித்த திட்டம் இவ்வாண்டு 2,400க்கும் மேற்பட்ட இளம் ஊழியர்களுக்குப் பயனளிக்கிறது.

அவ்வாறு தொடக்கத்திலிருந்தே தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ளும் இளம் ஊழியர்கள் நிறுவனங்களை ஈர்க்கின்றனர் என்று தொழில் வழிகாட்டி ஒருவர் குறிப்பிடுகிறார்.

இருப்பினும் தெளிவான காரணங்களின்றி அடிக்கடி வேலை மாறுவது நல்லதல்ல என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்