Skip to main content
நவரசத் திருவிழா
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

இளையர் குரல் exclusive

நவரசத் திருவிழா - இளையர்களுக்காக இளையர்களே நடத்தும் நிகழ்ச்சி

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

புத்தகம் சுமந்து தமிழ் கற்றது ஒரு காலம்...

இப்போது திறன்பேசிகளில் தமிழைச் சுவாசிக்கும் புதிய புரட்சியைத் தொடங்கியுள்ளனர் இளையர்கள் சிலர்.

காலாங் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவைச் சேர்ந்த அவர்கள் நவரசத் திருவிழா எனும் தமிழ் மொழி, கலாசாரப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்தனர்.

அவற்றில் ஒன்று ரீல்ஸ் போட்டி.

Related article image
படம்: சுதேஷ்னி தனராஜ்
Related article image
படம்: சுதேஷ்னி தனராஜ்
Related article image
படம்: சுதேஷ்னி தனராஜ்

"இப்போது புதிய தலைமுறையினர் வருகின்றனர். அவர்களும் தமிழ் பேச வேண்டும். அதற்காக Instagram ரீல்ஸ் போட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். நாங்கள் ஒரு கருப்பொருளைக் கொடுப்போம். அதற்கேற்ப மாணவர்கள் காணொளி ஒன்றைத் தயாரித்து அனுப்பினார்கள்" என்றார் நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழு உறுப்பினர் குமரன் மதியழகன்.

நவரசத் திருவிழா 12வது முறையாக நடைபெறுகிறது.

கடந்த 3 ஆண்டுகளாக நவரசத் திருவிழா தமிழ் மொழி விழாவின் ஓர் அங்கமாக இடம்பெற்று வருகிறது. 

ஆடல், பாடல், நாடகம், கலையோவியம், புத்தாக்கத் திறன் சவால், ரீல்ஸ் (Reels) சவால் ஆகிய போட்டிகளில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

பள்ளிகள் அந்த 5 போட்டிகளிலும் கலந்துகொள்ள வேண்டும்.

மொத்தம் 10 பள்ளிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டன.

தமிழ் மொழி, கலாசாரம் மீது மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்ட இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி இளையர்களால் இளையர்களுக்கு நடத்தப்படுகிறது. 

Related article image
படம்: சுதேஷ்னி தனராஜ்
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்