Skip to main content
தேசிய தினம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

இளையர் குரல் செய்தியில் மட்டும்

தேசிய தினம் - மனத்தில் நின்ற தருணம்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஒவ்வோர் ஆண்டும் தேசிய தின அணிவகுப்பு பல புது அம்சங்களுடன் வருகிறது.

இத்தனை ஆண்டுகள் பார்த்த தேசிய தின அணிவகுப்பு நிகழ்ச்சிகளில் மறக்க முடியாத தருணம் எது?

பகிர்ந்தனர் இளையர்கள் சிலர்....

2022இல் மூன்றாம் வாரண்ட் அதிகாரி ஜெஃப்ரி ஹெங் (Jeffrey Heng) வான்குடை சாகசம் செய்யும்போது கீழே விழுந்த தருணத்தை மறக்கவே முடியாது. அதனை நேரில் அல்லது தொலைக்காட்சி வழி பார்த்த சிங்கப்பூரர்கள் அனைவரும் அவர் மீது காட்டிய அக்கறை நாம் ஒன்றுபட்ட சமுதாயம் என்பதை வலியுறுத்துகிறது. தேசிய தின அணிவகுப்பு நிகழ்ச்சியை மக்களிடம் கொண்டுசேர்க்க சேவையாளர்கள் எதிர்நோக்கும் அபாயங்களை அந்தச் சம்பவம் நமக்கு நினைவூட்டுகிறது.

- அன்பு
Related article image
FB/Ng Eng Hen
2020ஆம் ஆண்டு மார்சிலிங்கில் நடந்த தேசிய தின வாகன 
அணிவகுப்பின்போது பொதுமக்கள் ரோட்டில் சென்றுகோண்டிருந்த வாகனங்களில் இருந்த அதிகாரிகளை நோக்கிக் கை அசைத்தனர். பதிலுக்கு அதே வழியில் சென்ற Foodpanda உணவு விநியோக ஓட்டுநர் ஒருவர் மக்களைப் பார்த்து கை அசைத்தார். அந்தத் தருணம் மனத்திற்கு நெகிழ்ச்சியாக இருந்தது. கோவிட்-19 கிருமித்தொற்றின்போது உணவு விநியோக ஓட்டுநர்களின் உதவியை மக்கள் அதிகம் நாடினர். அன்று அவருக்குக் கிடைத்த கரவொலி ஏற்புடையது என்று பலர் நினைத்தனர்.

- லாவண்யா
Related article image
காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்
2019இல் நான் முதன்முறையாகத் தேசிய தின அணிவகுப்பை நேரில் பார்த்தேன். அனைவரும் ஒன்றுசேர்ந்து தேசிய கீதத்தைத் தேசப்பற்றுடன் பாடிய தருணம் மெய்சிலிர்க்க வைத்தது. இன்று வரை அது என் நினைவில் உள்ளது.

- பவித்ரா
Related article image
படம்: செய்தி
சென்ற ஆண்டு (2024) தேசிய தின அணிவகுப்பில் ஷபீர் தேசிய கீதம் பாடிய தருணம் என் நெஞ்சுக்கு நெருக்கமானது எனலாம். அவர் நமது இந்தியச் சமூகத்தைப் பிரதிபலித்துப் பாடலைப் பாடியது பெருமைக்குரியது.

- அனு
Related article image
படம்: Instagram/Mediacorp
ஒவ்வோர் ஆண்டும் தேசிய தினத்தின்போது உற்றார், உறவினர்கள், சக சிங்கப்பூரர்களுடன் இணைந்து வாணவேடிக்கையைப் பார்க்கும்போது கிடைக்கும் உணர்வை வார்த்தைகளால் வருணிப்பது சிரமம்.

- ஆதி
Related article image
CNA
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்