Skip to main content
"நாடகத்தில் பல திருப்புமுனைகள், வாழ்க்கைப் பாடங்கள்"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

இளையர் குரல் செய்தியில் மட்டும்

"நாடகத்தில் பல திருப்புமுனைகள், வாழ்க்கைப் பாடங்கள்"

வாசிப்புநேரம் -
துடிப்புமிக்க நடிப்பு, மனத்தை இசையவைக்கும் ஆடல்பாடல், கண்கவர் மேடை அலங்காரம், கண்ணுக்கு விருந்தளிக்கும் ஆடை ஆபரணங்கள்....

இப்படிப் பல அம்சங்களை நீ ஆன் (Ngee Ann) பலதுறைத் தொழிற்கல்லூரியின் இந்தியக் கலாசார மன்றம் மேடையேற்றவிருக்கும் 'மறுபடியும் முதலில் இருந்தா?' எனும் நாடகத்தில் எதிர்பார்க்கலாம் என்று தயாரிப்பாளர் கிருஷ்மிதா 'செய்தி'யிடம் பகிர்ந்தார்.

"அயரா உழைப்பு, கூட்டு முயற்சி"

ஒவ்வோர் ஆண்டும் இந்தியக் கலாசார மன்றம் நாடகத்தை மேடையேற்றுகிறது. இருந்தபோதிலும் அது தனித்து நிற்கவேண்டும் என்பதில் கவனம் செலுத்துவதாகச் சொன்னார் கிருஷ்மிதா. மாணவர்களின் அயரா உழைப்பும் கூட்டு முயற்சியும் பலனளிக்கும் என நம்புவதாக அவர் கூறினார்.

"ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்தோம்"

தமது குழு ஒவ்வோர் அம்சத்தையும் உன்னிப்பாகக் கவனித்ததாகக் கிருஷ்மிதா நெகிழ்ந்தார். அது பார்வையாளர்களை ஈர்க்கும் வண்ணம் அமைந்திருக்கும் என்றார் அவர்.

"திருப்புமுனைகள், வாழ்க்கைப் பாடங்கள்"

நாடகத்தில் எதிர்பாராத் திருப்புமுனைகள் இருக்கும் என்றும் பல வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்றும் உணர்வு மேலோங்கச் கூறினார் கிருஷ்மிதா.

அதுபோகப் பல இளையர்களின் திறன்களை வெளிக்கொணர நாடகம் வாய்ப்பளித்ததாகவும் அவர் முத்தாய்ப்பாய்ச் சொன்னார்.

நாடகம் வரும் ஜனவரி 21ஆம் தேதி மாலை 6.30 மணியிலிருந்து இரவு 8 மணி வரை நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் இடம்பெறும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்