"பெருமையாக உணர்கிறோம்" - மாணவர்களே மாணவர்களுக்காக நடத்திய 'பார்வை' நிகழ்ச்சி
வாசிப்புநேரம் -

(படங்கள்: ஹாரூன்)
"சிலம்பின் வழி கலை, வணிகம், பொறியியல்".
சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக் கொண்ட 'பார்வை' நிகழ்ச்சியை மாணவர்களே மாணவர்களுக்காக நடத்தியிருக்கின்றனர்.
சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக் கொண்ட 'பார்வை' நிகழ்ச்சியை மாணவர்களே மாணவர்களுக்காக நடத்தியிருக்கின்றனர்.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (NTU) தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் மொழி விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி 'பார்வை 2024'.

ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தை ஒட்டி இயல், இசை, நாடக அம்சங்களுடன் இந்த நிகழ்ச்சி உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் முகாமாக நடத்தப்பட்டது.

பழங்காலத்தில், கலைகள், வணிகம், பொறியியல் ஆகியவை எவ்வாறு இருந்தன என்பதை புதுமையான முறையில் தமிழ் இலக்கியத்தின் வாயிலாகப் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதுதான் நிகழ்ச்சியின் நோக்கம் என்றனர் ஏற்பாட்டாளர்கள்.

"மாணவர்கள் இலக்கியத்தின் மீதான தங்களது ஆர்வத்தை அதிகரித்துக்கொள்ள நிகழ்ச்சி ஒரு தொடக்கப் புள்ளியாக இருக்கும்," என்று நம்புவதாகக் கூறினர் ஏற்பாட்டாளர்கள்.
நிகழ்ச்சியில் சுமார் 70 மாணவர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் சுமார் 70 மாணவர்கள் பங்கேற்றனர்.

மாணவர்களே மாணவர்களுக்காக இந்த நிகழ்ச்சியை நடத்தியதில் பெருமிதம் கொள்வதாக NTU தமிழ் இலக்கிய மன்றம் கூறியது.
(படங்கள்: 'பார்வை' நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழு)