Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

இளையர் குரல் செய்தியில் மட்டும்

"இளையர்கள் தமிழ் கலாசாரத்தின் மீது வைத்திருக்கும் ஈடுபாடு அதிகரிக்கும்"

வாசிப்புநேரம் -
தீபாவளியைப் பற்றிப் பலருக்குத் தெரிந்திருக்கும்...

ஆனால் பொங்கல் என்றால் என்ன? அது ஏன் கொண்டாடப்படுகிறது? பொங்கல் பண்டிகை 4 நாளுக்கு நீடிப்பது ஏன்? இப்படிப் பல கேள்விகள் இளையர்கள் மனத்தில் தோன்றலாம்.

அவற்றிற்குப் பதிலளிக்கும் வகையில் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றம் 'பொங்குவதெல்லாம் உண்மை' எனும் பொங்கல் நிகழ்ச்சியைச் சென்ற ஞாயிற்றுக்கிழமை (26 ஜனவரி) நடத்தியிருந்தது.

"முதன்முறையாகப் பெரிய அளவில் பொங்கல் நிகழ்ச்சி"

முதன்முறையாகப் பல இளையர் அமைப்புகளுடனும் பல்கலைக்கழகங்களுடனும் சேர்ந்து பொங்கல் கொண்டாடிய அனுபவம் மனத்திற்கு நிறைவாக இருந்ததாக NTU தமிழ் இலக்கிய மன்றத்தின் பேச்சாளர் 'செய்தி'யிடம் கூறினார். இளையர்கள் பல நண்பர்களைச் சந்திக்க நிகழ்ச்சி வாய்ப்பளித்தது என்றார் அவர்.

"பாரம்பரியம் மாறாது"

காலப்போக்கில் பொங்கல் கொண்டாடும் விதம் மாறினாலும் பொங்கல் கொண்டாடுவதற்கான அடிப்படைக் காரணங்கள் மாறாது என மன்றம் வலியுறுத்தியது.

இயற்கைக்கும் உழவுக்கும் நன்றி சொல்லும்
பொங்கல் திருநாளைப் பற்றி இளையர்கள் மேலும் தெரிந்துகொள்ள சுவாரஸ்யமான விளையாட்டு அங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அத்துடன் ஆடல், பாடல், நாடகம் ஆகியவற்றில் இளையர்கள் திறமைகளை வெளிப்படுத்த நிகழ்ச்சி சிறந்த தளமாக அமைந்தது.

இதுபோன்ற நிகழ்ச்சிகளின் மூலம் இளையர்கள் தமிழ்க் கலாசாரத்தின் மீது வைத்திருக்கும் ஈடுபாடு அதிகரிக்கும் என நம்புவதாக NTU தமிழ் இலக்கிய மன்றம் 'செய்தி'யிடம் பகிர்ந்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்