Skip to main content
பணம் கொடுத்துப் பங்கெடுக்கும் ஓட்டங்கள்... அவசியமா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

இளையர் குரல் செய்தியில் மட்டும்

பணம் கொடுத்துப் பங்கெடுக்கும் ஓட்டங்கள்... அவசியமா?

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஓடி உடற்பயிற்சி செய்வதற்குப் பல பூங்காக்கள் உள்ளன...

விளையாட்டு அரங்கங்கள் உள்ளன...

ஏன்... நடைபாதைகளில் கூட ஓடலாம்...

இருப்பினும் பணம் செலுத்தி ஓடும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போக்கு அதிகரித்துள்ளது.

அது போன்ற நிகழ்ச்சிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன.

மக்களும் கலந்துகொள்கின்றனர்.

ஆர்வத்திற்குக் காரணம்?

"இதுவும் தேர்வு போலத்தான்"

"படிக்கின்றோம். தேர்வு இல்லை என்றால் படித்ததை எப்படிச் சோதிப்பது? அதே போன்று தான் இந்த ஓடும் நிகழ்ச்சிகளும்"

"தடைகளை மீறி நம்மால் எவ்வளவு தூரம் ஓட முடியும் என்பதை உணர்த்த இத்தகைய நிகழ்ச்சிகள் உதவுகின்றன."

என்றார் கார்த்திக்.

இவர் 42 கிலோமீட்டர், 30 கிலோமீட்டர் நெடுந்தொலைவு ஓட்டங்களில் பங்கெடுப்பவர்.

எளிதல்ல... தயாராகக் கடுமையாக பயிற்சி செய்யவேண்டும்.

அப்படிப் பயிற்சி செய்து ஓட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும்போது மனத்தில் ஒரு திருப்தி கிடைப்பதாகப் பகிர்ந்தார் கார்த்திக்.

ஏன் பணம் செலுத்திப் பங்கெடுக்க வேண்டும்?

"இடையூறு இன்றி ஓடலாம்"

"சாதாரணமாக சாலையில் ஓடும்போது நின்று நின்று தான் செல்ல வேண்டும். பல இடையூறுகள் வரலாம்."

"இதுபோன்ற ஓட்டங்களில் ஓடுவதற்கு ஒழுங்கான பாதைகள் அமைக்கப்பட்டிருக்கும். எங்கும் நிற்கத் தேவையில்லை,"

என்றார் கார்த்திக்.

ஒரே ஆர்வம் கொண்ட பலரைச் சந்திக்கவும் ஓட்டங்கள் வழிவகுப்பதாக அவர் சொன்னார்.

"ஒன்றாக ஓடும்போது ஒரு தனி உற்சாகம், உத்வேகம் கிடைக்கும். தெரியாதவர் கூட ஓட்டத்தை முடிக்க ஊக்குவிப்பார்."
"பணம் கட்டியதற்காகவே ஓடுவோம்"

பணம் செலுத்திவிட்டோமே என்பதற்காகவே ஓட்டத்திற்குப் பயிற்சி செய்பவர்கள் உண்டு என்கிறார் நிரோஷா.

தொண்டூழியம் தொடர்பான ஓட்டங்களில் நிரோஷாவிற்கு அதிக ஆர்வம் உண்டு.

"அவை நல்ல நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்படுவதால் அவற்றுக்குப் பணம் செலுத்தி கலந்துகொள்ளத் தயங்குவதில்லை."

"ஓட்டங்கள் வணிகமயமாகிவிட்டன"

பெரிய நிறுவனங்களின் ஆதரவு, விளம்பரங்கள் என சில ஓட்டங்கள் வணிகமாக்கப்பட்டுவிட்டதாக நிரோஷா வருந்தினார்.

"சில ஓடும் நிகழ்ச்சிகளுக்கான கட்டணம் ஆண்டுதோறும் அதிகரிக்கிறது"

"அதனால் சிலர் வெளிநாடுகளுக்குச் சென்று அத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பது உண்டு,"

என்றார் அவர்.
"அதிக விலை கொடுத்து... தேவையில்லை"

அதிக பணம் கொடுத்து பங்கெடுப்பதில் பயனில்லை என்றார் உடற்பயிற்சியில் ஈடுபடும் காலிட்.

அவர் பெரும்பாலும் இலவச ஓட்டங்களில் மட்டுமே கலந்துகொள்வதாகச் சொன்னார்.

"எங்கு வேண்டுமானாலும் ஓடலாம். அதற்கு குறிப்பிட்ட நேரமோ இடமோ தேவையில்லை," என்பது அவரது கருத்து.

மேலும் செய்திகள் கட்டுரைகள்