இளையர் குரல் செய்தியில் மட்டும்
"Peer Pressure" - அடுத்தவரைப் பார்த்தே நொந்துபோகும் போக்கு.....விளைவு?
படம்: Envato
"அவருடைய தொலைபேசி புதிதாக இருக்கே..."
"இத்தனை நாடுகளுக்குப் போயிருக்கிறார்களா..."
"அவரின் படத்திற்கு இத்தனை விருப்பக் குறிகளா (likes)?"
"இவருக்கு இவ்வளவு மதிப்பெண்களா..."
இப்படி அடுத்தவரைப் பார்த்தே நொந்துபோகும் போக்கு உலகில் அதிகரித்துவிட்டது.
குறிப்பாக இளையர்களிடையே...
புதிய ரக திறன்பேசி வைத்திருக்க வேண்டும்; நன்றாகப் படிக்க வேண்டும்; சமூக ஊடகத்தில் பிரபலமாக இருக்க வேண்டும்; விடுமுறை என்றால் ஊர் சுற்ற வேண்டும்...
இப்படி ஏராளமான எதிர்பார்ப்புகள்!
அதனால் இளையர்கள் பலரும் "Peer Pressure" அதாவது உடன் இருப்பவர்கள் கொடுக்கும் நெருக்குதலுக்கு ஆளாவதாகக் கூறுகின்றனர்.
"Peer pressure" உணர்ந்தது உண்டா என்று 'செய்தி'யின் Instagram செயலியில் கேட்டோம்.
👍: 73%
👎: 27%
💄 சமூக ஊடகத்தில் அழகிய தோற்றத்தைப் பார்க்கும்போது...
"சமூக ஊடகத்தில் நண்பர்கள் பகிரும் அழகிய படங்களை என்னுடன் ஒப்பிட்டு வருந்தியுள்ளேன். எனது தோற்றம் குறித்து பதற்றம்தான் மிஞ்சியது; தன்னம்பிக்கையை இழந்தேன். பிறகு எல்லாரும் அவரவர் தோற்றத்தில் அழகு என்பதை உணர ஆரம்பித்து என் எண்ணங்களை மாற்றிக்கொண்டேன்"
- நித்யா
🎵 ஆங்கிலப் பாடல்களில் ஆர்வம் இல்லை...ஆனாலும் கேட்கிறேன்...
"ஆங்கிலப் பாடல்கள் கேட்பதில் எனக்கு ஆர்வமில்லை. ஆனால் என்னுடன் இருப்பவர்கள் கேட்கிறார்கள் என்பதற்காக நானும் அதை கேட்கிறேன்..."
💔 நட்பை இழந்துவிடுவேன் என்ற பயம்....
"நன்றாகப் படிக்கும் எனது நண்பர்களுக்கு இடையே நானும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்; அவர்கள் என்னை தாழ்த்திவிடக் கூடாது என நெருக்குதல்..."
"இன்னொரு பக்கம் சமூக ஊடகத்தில் சகாக்களின் சுதந்திரமான வாழ்க்கையைப் பார்த்து அதே போன்று நானும் வாழ வேண்டும் என நெருக்குதல்..."
💰 ஆடம்பர வாழ்க்கை.....
"திறன்பேசி உள்ளிட்ட விலையுயர்ந்த பொருள்களை நான் பயன்படுத்துவதில்லை. இதனால் உடன் இருப்பவர்களின் ஆடம்பர வாழ்க்கையை மிகப் பெரிய நெருக்குதலாக உணர்கிறேன்"
- சிட்டாள்
நெருக்குதல் ஒருபுறம் இருந்தாலும், இந்த அழுத்தம் வாழ்க்கையில் சிறந்தவற்றை அடைய உதவியிருப்பதாகச் சிலர் கூறினர்.
💪 பலசாலியாக மாறினேன்....
"நான் நன்றாகப் படிப்பேன். இருந்தாலும் என்னைவிட சற்று அதிகப் புள்ளிகளை எடுத்தவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன். ஒருவகையில் இந்த நெருக்குதல் படிப்பில் என்னை இன்னும் பலசாலியாக மாற்றியுள்ளது"
- பவித்ரா
🙅 மற்றவர்களுக்காக மாற வேண்டும் என்ற எண்ணம் இல்லை....
"மற்றவர்கள் செய்வதைப் பின்பற்றாமல் தனித்து நிற்பதை விரும்புவேன். எனக்குப் பிடித்தவற்றைச் செய்வதில் கவனம் செலுத்துவேன். என்னை மற்றவர்களுக்காக மாற்றிக்கொள்ளும் எண்ணம் இல்லை"