Skip to main content
மீண்டும் வந்துவிட்டது 'சங்கே முழங்கு'!
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

இளையர் குரல் exclusive

மீண்டும் வந்துவிட்டது 'சங்கே முழங்கு'!

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை ஏற்பாட்டில் 'சங்கே முழங்கு 2025' இன்று ஆகஸ்ட் 1ஆம் தேதி அரங்கம் கண்டது.

இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை அரங்கேறி வரும் மாணவர்களின் மாபெரும் நிகழ்ச்சி 'சங்கே முழங்கு'.

1987ஆம் ஆண்டில் முதன்முறையாகச் 'சங்கே முழங்கு' மேடையேறியது.

அது முதல் சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தில் அதற்கென்று ஒரு தனி இடம் உண்டு.

வித்தியாசமான படைப்புகள் கட்டாயம் இருக்கும். ஆற்றல் மிகுந்த மாணவர்களைச் சந்திக்கலாம். மக்களிடையே பெரும்பரபரப்பை ஏற்படுத்துவது சங்கே முழங்கின் தனி இயல்பு.

தமிழ் இளையர்கள் தங்கள் தனித்துவத்தை வெளிப்படுத்தவும், சமூகத்தோடு உள்ள தொடர்பை வலுபடுத்தவும் அது கைகொடுக்கிறது.

இசை, நடனம், நாடகம் கலந்த இந்த மாபெரும் படைப்பு நாளையும் (ஆகஸ்ட் 2) அரங்கேறும்.

இவ்வாண்டின் கருப்பொருள்?

"இழப்புகள் மட்டுமே நிறைந்த இந்த நரகத்தில், இழப்பில்லாச் சொர்கத்தைக் காட்டினால், நீங்கள் ஏற்பீர்களா?"

தொழில்நுட்ப வளர்ச்சி, குறிப்பாகச் செயற்கை நுண்ணறிவை மையமாக வைத்துக் கருப்பொருள் அமைக்கப்பட்டது.

இளையர்களுக்கு மிகவும் பொருத்தமான கருப்பொருள் என்று பேரவையின் தலைவர் கார்த்திகேயன் கூறினார்.

"தொழில்நுட்பத்தை நாம் நம்பியிருக்கிறோம். இதனால் நமது உறவுகளும் உணர்வுகளும் பாதிப்படைக்கின்றன. அதைப் பற்றி மேலும் ஆழமாகச் சிந்திக்க நமது நாடகப் படைப்பு உதவும்" என்றார் அவர்.

ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் இலவசமாக இருந்தாலும் அவற்றைப் பயன்படுத்துவதால் விளைவுகள் என்ன என்பதையும் உணரவேண்டும் என்பதை நாடகம் எடுத்துரைக்கும் என்றார் தயாரிப்பு நிர்வாகியும் நடிகையுமான அருணா.

தமிழுக்கும் இளையர்களுக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்த 'சங்கே முழங்கு' எப்படி உதவும்?

"தமிழ்ப் பாடல்களைப் பயன்படுத்தி நடனங்களை அமைத்திருக்கிறோம். இதனால் பாடல் வரிகளின் பொருளை ஆழமாகப் புரிந்துகொண்டு தமிழ்ப் பாடல்களின் அருமையை உணர்ந்துகொள்ள முடியும்," என்று படைப்பின் நடன ஆசிரியர் ஜெயசூரியா கூறினார்.

"இப்போது தமிழ்ப் புழக்கம் குறைந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. தொழில்நுட்பம் வளர வளர தமிழ்ப்புழக்கம் குறையக்கூடும். எனினும் தமிழ் மொழியும் கலாசாரமும் மென்மேலும் வளரத் தொழில்நுட்பத்தை எவ்வாறு சாதகமாகப் பயன்படுத்தலாம் என்பதை நாடகத்தின் மூலம் அறியலாம்; இவ்வாறு சமூகப் பிணைப்பையும் வலுப்படுத்தலாம்," என்று திரு கார்த்திகேயன் கூறினார்.

மாணவர்கள் நம்பிக்கையோடு இருக்கின்றனர்.

தமிழின் மீது தொடர்ந்து புதிய நம்பிக்கை வெளிச்சத்தைப் பரப்புகிறது 'சங்கே முழங்கு'.
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்