Skip to main content
தென்கிழக்காசிய விளையாட்டுகளில் முதன்முறையாகக் கபடி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

இளையர் குரல் exclusive

தென்கிழக்காசிய விளையாட்டுகளில் முதன்முறையாகக் கபடி - போட்டிக்குத் தயாராகும் சிங்கப்பூர்க் குழு

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

கபடி...கபடி....கபடி....

4,000 ஆண்டுப் பழமையான ஒரு விளையாட்டு.

இந்தியாவில் கிராமங்களில் பரவலாக விளையாடப்பட்டு இன்று உலக அரங்கில் இடம்பிடித்துள்ளது.

இப்போது முதன் முறையாகத் தென்கிழக்காசிய விளையாட்டுகளிலும் சேர்க்கப்பட்டிருக்கிறது.

அடுத்த மாதம் தாய்லந்தில் நடக்கவுள்ள போட்டிகளில் சிங்கப்பூர்த் தேசியக் கபடி குழுக்களும் களமிறங்கவுள்ளன.

போட்டிக்காகத் தயாராகும் கபடி வீரர்களின் பயிற்சியில் 'செய்தி' கலந்துகொண்டது.

கடும் பயிற்சி

சிலோன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் (Ceylon Sports Club) ஆண்கள் குழுவின் பயிற்சி நடைபெற்றது.

கபடி உடல் வலிமை அதிகம் தேவைப்படும் விளையாட்டு. எனவே, முதலில் வீரர்கள் உடற்பயிற்சி செய்யத் தொடங்கினர்.

அடுத்துக் கபடிக்குத் தேவையான முக்கிய நுணுக்கங்களைப் பயிற்சி செய்தனர்.

எதிரணியினரை லாவகமாகத் தொட்டுவிட்டு மாட்டிக்கொள்ளாமல் நடுக்கோட்டைத் தொடுவது ஆட்டத்தின் முக்கிய இலக்கு.

அதற்கேற்ப பயிற்றுவிப்பாளர் சொல்லித் தரும் அணுகுமுறைகளை வீரர்கள் கூர்ந்து கவனித்தனர். பின் அவற்றை மீண்டும் மீண்டும் செய்து பழகினர்.

"துணிவு முக்கியம்"

"பெரும்பாலான விளையாட்டுகளில் இரு அணிகள் மோதும்போது விளையாட்டாளர்களின் எண்ணிக்கை சமமாக இருக்கும்.
ஆனால் கபடியில் எதிரணியின் 7 வீரர்களைத் தனியாக எதிர்கொண்டு புள்ளிகளைப் பெறவேண்டும். அதற்குத் துணிவு மிக முக்கியம்," என்றார் அணித் தலைவர் விஷ்வா தேவா.

அணியைச் சேர்ந்த அன்பு நவின் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து விளையாடுவது பெருமையாக இருப்பதாகச் சொன்னார்.

"போட்டி கடுமையாக இருக்கும்"

இந்த வட்டாரத்தில் மிகவும் வலிமையான அணிகளைக் கொண்டுள்ள தாய்லந்து, இந்தோனேசியா, மலேசியா ஆகியவற்றுக்கு எதிராகப் போட்டி கடுமையாக இருக்கும்.

இருப்பினும் விடாமுயற்சியுடன் விளையாடி மேலும் முன்னேற்றம் காண்பதே தேசிய அணியின் முக்கிய இலக்கு என்றார் சிங்கப்பூர்க் கபடி சங்கப் பொருளாளர் திரு முகமது சல்மான்.

தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சிறப்பாக விளையாடி சிங்கப்பூருக்குப் பெருமை சேர்க்க முனைப்புடன் இருக்கும் தேசியக் கபடிக் குழுக்களுக்குச் 'செய்தி'யின் வாழ்த்துகள்.

 
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்