Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

இளையர் குரல் செய்தியில் மட்டும்

"8.30 மணி தொலைக்காட்சி செய்தியை இளையர்களிடம் எடுத்துச் செல்லும் ஒரு நல்ல முயற்சி"

வாசிப்புநேரம் -

8.30 மணி தொலைக்காட்சி செய்தியை இனி 'செய்தி' செயலியில் நேரடியாகக் காணலாம்.

இந்த புது அம்சம் செயலியிலும் இணையப்பக்கத்திலும் அறிமுகமாகியுள்ளது. 

அது குறித்து இளையர்கள் என்ன நினைக்கிறார்கள்? 8.30 மணிச் செய்தியைப் பார்க்க இது தூண்டுதலாக இருக்கிறதா? 

சிலரிடம் பேசினோம்...

"சிங்கப்பூரில் மட்டுமல்லாமல் வெளிநாட்டில் இருக்கும்போதும் செய்தியை இனி நேரடியாகப் பார்க்கும் வசதி பயனளிக்கும். எத்தனை வெளிநாட்டுச் செய்தி நிறுவனங்கள் இருந்தாலும் உள்ளூர்ச் செய்தி பார்ப்பது போன்று வராது. உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் சிங்கப்பூர்த் தமிழ் சமூகத்துடன் இணைந்திருப்பது போன்ற உணர்வு கிடைக்கும்" 

- யுவராஜ் 

"குறிப்பாக இளையர்களுக்குப் பயனளிக்கும்..பரபரப்பான இன்றைய சூழலில் கைத்தொலைபேசி மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் செய்தியை நேரடியாகப் பார்க்கலாம்" 

- அஷ்வின்

"8.30 மணிச் செய்தியை நேரடியாகப் பார்ப்பதற்கு முன்னரே பல தகவல்களைச் சமூக ஊடகப் பக்கங்களில் படித்துத் தெரிந்துகொள்ளலாம். ஆனால் 
நம்பக்கத்தன்மை வாய்ந்த செய்தித் தளங்களில் அந்தச் செய்திகளை உறுதிப்படுத்த வாய்ப்புக் கிடைக்கும் என்பதை ஒப்புக்கொள்கிறேன்." 

- அனுஷா 

"நல்ல முயற்சி..ஆனால் செய்தியை mewatch தளத்தில் காணலாமே. அதுவும் mewatchஇல் செய்தியை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். நேரடியாகப் பார்க்கவேண்டும் என்று அவசியமில்லை" 

- பவித்ரா

"தமிழ்ச் செய்தியை இளையர்களுக்குக் கொண்டுசேர்க்க இது ஒரு சிறந்த முயற்சி! ஆனால் நேரடியாகப் பார்ப்பதைக் காட்டிலும் செயலியில் சுருக்கமான தகவல்களைத் தான் படிக்க விரும்புகிறேன்.நேரம் கிடைக்கும்போது முக்கியச் செய்திகளை எளிதில் படித்துவிடலாம்." 

- நந்தினி

"இந்தப் புது அம்சத்தின் வழி 'இன்றைய 8.30 மணிச் செய்தியைப் பார்க்கத் தவறிவிட்டோமே' என்ற கவலை இனி மக்களுக்கு இருக்காது" 

- திவிஜா

ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்