செய்திக்குத் தேவை என்ன? - புரிந்துகொண்டு போட்டிக்குத் தயாராகும் இளையர்கள்
வாசிப்புநேரம் -

(படங்கள்: இம்ரான்)
மீடியாகார்ப் தமிழ்ச்செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு ஏற்பாடு செய்துள்ள 'செய்திக்காக'! போட்டி இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

King Albert Park MRT நிலையத்துக்குப் பக்கத்தில் இருக்கும் KAP Mallஇல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
காலை 9 மணிக்குத் தொடங்கிய நிகழ்வில் 30க்கும் அதிகமான இளையர்கள் பங்கேற்றுள்ளனர்.
காலை 9 மணிக்குத் தொடங்கிய நிகழ்வில் 30க்கும் அதிகமான இளையர்கள் பங்கேற்றுள்ளனர்.

அவர்கள் 18 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று அங்கிருக்கும் எமது நிருபர் நீவன் தெரிவித்தார்.

பதிவு, அறிமுக அங்கத்துக்குப் பிறகு அவர்களுக்கான பயிலரங்கு தொடங்கியது.

செய்தியை எளிமையாக அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எப்படித் தயாரிப்பது, அதற்கான காட்சி அமைப்புகள் எப்படி இருக்க வேண்டும், ஒலி-ஒளி அமைப்பின் முக்கியத்துவம் என்ன போன்ற அம்சங்கள் பற்றிப் பகிரப்பட்டன.

அதன் பிறகு அவர்கள் 11 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டிக்கான காணொளிகளைத் தயார் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பிற்பகல் 3 மணிக்குள் அவர்கள் காணொளிகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.
பிற்பகல் 3 மணிக்குள் அவர்கள் காணொளிகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.

அதன் பிறகு முடிவுகள் அறிவிக்கப்பட்டு நிகழ்ச்சியின் நிறைவு விழா நடைபெறும் என்றார் நீவன்.
ஒருநாள் நிருபராக மாறும் வாய்ப்பை மையமாகக் கொண்டு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
ஒருநாள் நிருபராக மாறும் வாய்ப்பை மையமாகக் கொண்டு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
தொடர்புடையது:
ஆதாரம் : Mediacorp Seithi