Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

இளையர் குரல் செய்தியில் மட்டும்

"16 வயதில் உதவி செய்யத் தொடங்கினேன்"- சிண்டா உன்னத விருது பெற்ற இளையர்

வாசிப்புநேரம் -
படிப்பில் மட்டும் சிறந்து விளங்கினால் போதாது, சமூக அக்கறையும் முக்கியம் என்கிறார் சிண்டா உன்னத விருது பெற்ற சாஷ்டிகா மோகன்.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற அவர் பல்வேறு சமூகப் பணிகளிலும் தொண்டூழியச் சேவைகளிலும் ஈடுபட்டிருக்கிறார்.

"பிறருக்கு உதவி செய்ய வயது ஒரு தடையல்ல"

இளம் வயதிலேயே பெற்றோர் பிறருக்கு உதவுவதைக் கண்டு வளர்ந்த அவர் இயன்றவரை தேவைப்படுவோருக்கு உதவி செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

"பிறருக்கு உதவி செய்ய வயது ஒரு தடையல்ல. 16 வயதில் Dyslexia எனப்படும் வாசிப்புத் திறன் குறைபாடு கொண்டவர்களுக்கு உதவும் நோக்கத்தில் நான் ஒரு நிதித்திரட்டு நிகழ்ச்சியின் குழுவுக்குத் தலைவராகப் பொறுப்பேற்றேன். சுமார் 10,000 வெள்ளி நிதிதிரட்டி dyslexia குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினோம்," என்று சாஷ்டிகா 'செய்தி'யிடம் தெரிவித்தார்.
(படம்: சாஷ்டிகா மோகன்)
"பெண்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும்"

"ஆண்கள் அதிகமாக இருக்கும் துறைகளில் பெண்களும் சாதித்துக் காட்டலாம். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் பயின்றபோது பெரும்பாலான ஆண்கள் இருந்த மாணவர் குழுவிற்கு இணைத் தலைவராகப் பொறுப்பேற்றேன். பாலின இடைவெளியைக் குறைக்க அது தூண்டுதலாக அமைந்தது," என்றார் சாஷ்டிகா.

சிண்டா உன்னத விருது பெற்றதில் பெருமை

சிண்டா உன்னத விருது கிடைத்ததை எண்ணிப் பெருமைப்படுவதாகவும் சமுதாயத்திற்குத் திருப்பிக் கொடுக்க அது உற்சாகம் அளித்ததாகவும் அவர் 'செய்தி'யிடம் பகிர்ந்தார்.

இளையர்களுக்குச் சொல்ல விரும்புவது?

--வாய்ப்புகளுக்காகக் காத்திருக்காதீர்கள்! நீங்கள் விரும்பும் வாய்ப்புகளைத் தேடுங்கள்!

-- மனத்திற்கு நெருக்கமானவற்றுக்குக் குரல்கொடுங்கள்

-- தோல்வியைக் கண்டு அஞ்சாதீர்கள்!

என்று முத்தாய்ப்பாய் மூன்றைச் சொன்னார் சாஷ்டிகா.
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்